பக்கம்:சுலபா.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт, шт, 249.

யிலிருந்து டிராவல் ஏஜென்ஸிஸ்காரர்கள் டெலிபோன் மூலம் சொல்லிவிட்டிருந்தனர். அதனல் குருபுரத்திலிருந்தே முகூர்த்தம் முடிந்து கேசரி, இட்டிலி, வடிை சாப்பிட்டுவிட்டுப் புறப்பட முடிந்தது.

இவர்கள் மதுரை போன பின்பும் நேரம் இருந்தது. ஆடிட்டரும் குப்தாவும் அம்மன் சந்நிதிப் பூக்கடைக்குச் சென்று, இரண்டு பெரிய ரோஜாப்பூ மாலைகள் வாங்கிக் கொண்டார்கள். தங்கள் போதாத காலம் ஒருவேளை சிவவடிவேலு பிளேனி லேயே பேப்பர் கீப்பர் பார்த்திருந்து, 'இதெல்லாம் யாரு? பார்கவி அஜீத்னு போட்டிருக்கிரே, அவளுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இந்த பயல் குமரேசன் பேரோட தேவ சேன்ைனு ஒட்டி வச்சிருக்கிரே அது யாரு? குருசரன் யாரு'ன்னு கேட்டால் நிதானமாக எப்படி எப்படித் தொடங்கி இருவருமாக அவருக்குச் சொல்லிக் கன்வின்ஸ்' செய்வது என்று பலமுறை ரிஹர்ஸல் பார்த்துக் கொண்டார்கள், அவர் கள். நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொண்டது. ஒரு வில்லன எதிர்கொள்ளும் கதாநாயகராகத் தவித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் கூட்டமே இல்லை. ஃப்ளேபி. லேம் என்பதால் அதற்காகக் காத்திருந்த பயணிகள் கூடக் கான்ஸல் செய்துவிட்டுப் போயிருந்தனர். பதிைேரு மணிக்கு வந்து திரும்பவும் புறப்பட்டு மெல்ல மெட்ராஸ் போகிற விமானத்தைவிட அதிகாலை வைகையில் போய் இரண்டு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம் எனப் பயணிகள் எண்ணியிருக்கக் கூடும். சென்னையிலிருந்து அதிகாலையில் மதுரை வந்து மறுபடி திரும்பச் சென்னை போகிற அந்த விமானம் அன்று சென்னையிலிருந்தே தாமதமாகப் புறப்பட்டி ருந்ததால் எல்லாமே தாறுமாருகக் குளறுபடி ஆகி இருந்தது.

சென்னையிலிருந்து வருகிற விமானம் சில விநாடிகளில் தரை இறங்கும் என்பதை விமான நிலைய ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். தாம் வந்து இறங்குகிற விமானத்தையே தாமதமாக்கக் கூடிய ஆற்றல் சிவவடிவேலுவுக்கு இருந்தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/251&oldid=565919" இலிருந்து மீள்விக்கப்பட்டது