பக்கம்:சுலபா.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 253

'சரி ஒரு தோல்வி போதும்! இப்போ அடுத்த தோல்வி வராமல் உஷாராகுங்க ஆசீர்வாத விஷயமா ஏற்பாடு பன்னுங்க" என்று ஆங்கிலத்தில் சொன்னன் குப்தா.

"இதோ ஒரு நிமிஷத்திலே முடிக்கிறேன். நீங்க கொஞ்சம் ஒல்ட் மேனை எங்கேஜ் பண்ணிக்குங்க, என்று கூறியபடியே ஆச்சியை ஜாடை காண்பித்துத் தனியே அழைத்துச் சென்ருர் ஆடிட்டர். ஆச்சியிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி "மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க, மங்களகரமான விஷயம். நீங்கதான் ஒத்துழைக்கனும்,' என்ருர் அனந்த். ஆச்சியை அவர் தாராளமாகப் புகழவே செய்தார்.

'ஒன்னும் கவலைப்படாதீங்க. ஆடிட்டர், இந்த மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை. குருபுரத்திலேயிருந்து ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மதுரை போயிட்டுத் திரும்பிளுல் கூடத் திரும்பி வந்ததும் தான் இல்லாதபோது இங்கே என்ன நடந்ததுவினு கரும்பாயிரத்தைக் கூப்பிட்டுக்கேட்கிற பழக்கம். அவனை உளவறிய ஆளாகப் பயன்படுத்திக்கிற பழக்கமெல்லாம் ஆதி நாளிலிருந்தே இந்த மனுஷன் கிட்டே உண்டு, கோள் சொல்லிக் கோள் சொல்லிப் பெத்த பிள்ளைகளுக்கும் அப்பனுக்கும் ஆகாமல் பண்ணினதே அந்தக் கரும்பாயிரம் தடியதைான், இப்பவும் அதுக்குத்தான் அந்தக் கடன்காரன் வந்திருக்கான்ைனு அரிப்பெடுத்துப் போய்த் தேடிறது கிழம்.' - - - கரும்பாயிரத்தை நாங்க வேலையை விட்டே போகச் சொல்லியாச்சு! அவன் குருபுரத்திலேயே இப்போ இல்லே ஆச்சி, மலை மேலே எங்கேயோ கேண்டின் நடத்தருளும்.'"

"நல்ல காரியம் பண்ணினிர். இனிமே இந்தக் குடும்பம் கூேடிமமாக இருக்கும். அப்பனுக்கும் மகனுக்கும் நடுவிலே வத்திவச்சுக் குச்சி முறிச்சுப் போட்டுக் கோஸ் சொல்லிப் பிழைக்கிற கிராதகன் அந்தக் கரும்பாயிரம்,' - - "சரி இப்போ சபை நடுவிலே ஆசீர்வாதம் பண்ணனுமே ஆச்சி' - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/255&oldid=565923" இலிருந்து மீள்விக்கப்பட்டது