பக்கம்:சுலபா.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பார்கவி

"சமாளிச்சிடலாம். இவருக்கு வெள்ளெழுத்துப் படிக்க, ஆள் யாருன்னு பார்க்கத் தனித் தனியே இரண்டு மூக்குக் கண்ணுடி மெட்ராஸ்லே சிங்கப்பூர் பிளேகிலேயிருந்து இறங் கினதும் படிக்கிற கண்ணுடியை உள்ளே வாங்கி வச்சுப் பூட்டிட்டதாலே மதுரை வர்றப்போ இத்த மனுஷன் பேப்பர் எதுவும் படிக்கலே. நாவிதான் படிச்சேன். ஆல்ை இவர் கிட்டே ஒண்ணும் சொல்லலே. இப்போ ஆள் பார்க்கிற கண்ணுடியையும் நைஸாகப் பறிமுதல் பண்ணிட்டாப் போச்சு! ரொம்ப வேண்டிய கல்யாணம் ஏர்போர்ட்லே இருந்து போறப்பவே ரெண்டு அட்சதையைப் போட்டு வாழ்த்திட்டுப் போயிடலாம்’னு நீங்களே சொல்றமாதிரிச் சொல்லுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன்' என்ருள் ஆச்சி.

ஆடிட்டர், ஆச்சி இருவரும் குப்தாவும் சிவவடிவேலுவும் நின்ற இடத்துக்குப் போனபோதும்கூட, "கரும்பாயிரம் வர லியா?" என்கிற அதே கேள்வியைத்தான் குப்தாவிடிம் பதினைந் தாவது தடவையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கிழவர்.

அங்கே இவர்கள் போய்ச் சேர்ந்ததும் மறுபடி ஆடிட்டி ரிடம் கேட்டார். ஆடிட்டர் வேறு ஏதோ பேசி மழுப்பினர்; "இந்தாங்க...முகத்திலே ஒரேயடியா எண்ணெய் வடியுது.என் கிபிடே கண்ணுடியைக் கழட்டிக் கொடுத்திட்டு வாஷ்பண்ணித் தொடைச்சிட்டு வந்திடுங்க. வீட்டுக்குப் போறதுக்கு முன்னடி இங்கேயிருந்து போறப்பவே ரொம்ப வேண்டிய கல்யாணம் ஒண்ணுக்குப் போய் ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்கிறாங்க' என்று கூறி ஆச்சி அவரது கண்ணுடி யைப் பறிமுதல் செய்தாள். அனந்த் கையைப் பிடித்துத் தடுக்கி விழாமல் அவரை விமான நிலைய வாஷ் பேஸினுக்கு அழைத்துச் சென்ருர், .

இந்த மனுஷன் ஆறு மாசத்துக்கு அப்புறம் சொந்த ஊரிலே வந்து இறங்கினல் மகள் மகன்கள், சுற்றத்தார் வேண்டியவர்கள் எதிரே வந்து மாலையோடு நிற்பவர்களைப் பற்றிக்கூடி கூேடிமலாபம் விசாரிக்காமல் கரும்பாயிரம் வரலியா என்றே பிதற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆடிட்டிருக்கே 'சே' என்ருகி விட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/256&oldid=565924" இலிருந்து மீள்விக்கப்பட்டது