பக்கம்:சுலபா.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 母邸母堡

ருெரு கையால் சென்ட் வாசனையை அந்தப் பகுதி முழுவதும் படரவிட்ட கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண் டார் எஸ்.பி.எஸ். என்கிற எஸ். பி. சிவதாணு . அசடு வழியக் கவிதாவைப் பார்த்து ஒரு தரம் சிரித்தார். பின்பு அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார்:

'பத்து மணிக்கு வரேன்னிருந்தேன்! கொஞ்சம் நேரமாயி டிச்சு... செட்ல எல்லாரும் ரெடியா இருக்காங்க... அம்மா அழுக்கு நோட்டு வாங்கமாட்டாங்க...அழுக்குன்னலே அவங் களுக்கு அலர்ஜி...அதுளுலே எல்லாத்தையும் சலவைநோட்டா மாதத நேரமாயிடிச்சு...புது நோட்டு அவசரமா மாத்தனும்னு நூறு ரூபாய்க்கு நாலணு வட்டம்’ கேட்கிருன். கமிஷன வெட்டாமச் சலவை நோட்டு வாங்க முடியலே. சாராயக் கடைங்க வந்து போனலும் போச்சு... மார்க்கெட்ல அழுக்கு நோட்டுச் செலாவணி ஒரேயடியா அதிகரிச்சுப் போச்சு..."

"பரவாயில்லே! வாங்க சார்! அம்மா உங்களை எதிர் பார்த்து ரெடியா இருக்காங்க...உடனே கிளம்பிறலாம்'

எஸ்.பி.எஸ். அம்பாள் சந்நிதிக்குள் நுழையும் பரம பக்த னைப் போல் செருப்புக்களை அறைமுகப்பிலேயே கழற்றிவிட்டுப் பயபக்தியோடு கவிதாவைப்பின்தொடர்ந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த சுலபா'வின் தனியறைக்குள் நுழைந்தார்.

'வாங்க எஸ்.பி.எஸ்! இந்தா கவிதா! அவருக்குக் குடிக்க எதாச்சும் ஜூஸ் குடு! பாவம்! எங்கெங்கியோ அலைஞ்சு களைச்சுப் போய் வந்திருக்கார் - என்று சுலபா அவரை வர வேற்ருள். - >

"பணம் நேத்தே ரெடிங்க! உங்களுக்குப் பிடிச்ச மாதிரிச் சலவை நோட்டா மாத்தறதுக்குத் தான் ஒரே அலைச்சல். பெரிய ஐம்பது கொண்டாந்திருக்கேன். சலவை நோட்டு வாங்கக் கமிஷன் மட்டுமே சுளையா நூத்தி இருவத்தஞ்சு ரூபா போயிரிச்சும்மா'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/26&oldid=565694" இலிருந்து மீள்விக்கப்பட்டது