பக்கம்:சுலபா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. , 27

நடுப்பகல் ஒரு மணி வரை ஷல்ட்டிங் நடந்து முடிந்ததும் லஞ்ச் இண்டர்வெல் வந்தது. எஸ். பி. எஸ். ஹீரோ குமார விஜயன், சுலபா எஸ். பி. எஸ்.ஸின் புரொடக்ஷன் மேனேஜர் எல்லாகும் கூட்டமாக இருந்தனர்.

'இந்தப்பா தனபால்! அந்தக் கதை வசனகர்த்தா கந்த சாமியைக் கூப்பிடு சொல்றேன்'-என்று தன்னுடைய புரொடக்ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொன்னர். தனபால் உடனே உள்ளே செட்டுக்கு ஒடிஞன். - -

வலது காதில் சொருகிய நீளமான பால்பாயிண்ட் பேணு வும் கையில் ஒரு கத்தை ஸ்கிரிப்ட்டுமாக ஒரு ரெட்டை நாடி சரீர ஆவி வந்தார். அதிக உயரமுமில்லை, குட்டையு மில்லை, குரல் மட்டும் வென்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி இருந்தது. நீண்டி நாட்களாக ஏதோ ஒர் இயக்கப் பேச்சாளராயிருந்து அப்புறம் வசனம் எழுது வந்தவர் போன்ற சாயல் தெரிந்தது. எஸ். பி. எஸ்ஸிடம் மரியாதையாக இருக்கிற பவ்யம் தென்பட்டது. அவரைப் பார்க்கதும் எஸ். பி. எஸ் மிகவும் உரிமையாக, கந்தசாமி! உங்க கிட்டி ஒரு விஷயம்... நம்ம கதையிலே எப்பிடியாச்சும் லண்டன், நியூயார்க், பாரிஸ், டோக்கியோ, இது மாதிரி ஃபாரின் லொக் கேஷன் வரணும்னு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆசைப்படருங்க. ஏதாவது வழிபண்ணுங்களேன்' என்ருர். -

இதைக் கேட்டுக் கதை வசனகர்த்தா கந்தசாமி ஒரிரு கணங்கள் விசனகர்த்தாவாக மாறிஞர்.

"அது எப்பீடிங்க? கதையோ அசல் கிராமியக்கதை! நிறைய ரூரல் மாஸ் அப்பீல் வேணும். ஊர், ஊரா நூறுநான் ஒடனும். சின்னச் சின்ன ஊர்லே கூடப் பாக்ஸ் ஆபீஸ், ஹிட் ஆகணும்னிங்க. அதுளுலே படுகிராமீயக்கதையா எடுக்க ஆரம்பிச்சோம். இப்பத் திடீர்னு பாரிஸ், லண்டன் வரணும்னு எப்பிடி...?’’

"ஏன் யா? கிராமீயக் கதா நாயகன் லண்டன், பாரிஸ் எல்லாம் போகக் கூடாதா என்ன?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/29&oldid=565697" இலிருந்து மீள்விக்கப்பட்டது