பக்கம்:சுலபா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дstroco. 31:

தனக்குப் பெயர் வைத்துக் கொடுத்தவரை இப்போது அவள் உள்ளம் வாழ்த்தியது. எல்லாம் சுலபமாகவே நடந்து விடு கின்றனவே!

பயணத்தில் படப்பிடிப்பை விடி அவர்கள் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியமாயிருந்தது.

கதாநாயகன், கதாநாயகி, காமிராமேன், டைரக்டர், தயாரிப்பாளர். தயாரிப்பாளரின் நெருக்கமுள்ள இரண்டு பணக்கார விநியோகஸ்தர்கள், கதாநாயகியோடு அவள் காரிய தரிசி கவிதா, ஆடிட்டர் கனகசபாபதி-என்று ஒன்பது பேர். புறப்பட்டிார்கள். கிடைத்த அந்நியச் செலாவணி அநுமதியில் இந்த ஒன்பது பேர்தான் போகமுடியும் என்று ஆகிவிட்டது. இவர்களிலேயே சிலருக்கு அநுமதி வாங்குவதற்காக யூனிட் டில் சம்பந்தப்பட்டவர்களைப் போலப் பெயர்கள் சூட்ட வேண்டி யிருந்தது. கவிதா காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்" ஆளுள், கனகசபாபதி-புரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆளும். எஸ். பி. எஸ்.ஸின் இரு நண்பர்களும் லொக்கேஷன் ஷாட் சம்பந்தப் பட்டி இரண்டு முக்கிய நடிகர்கள் என்று காட்டப்பட்டிருந்த னர். அந்தியச் செலாவணி அநுமதி வாங்குவதற்கு இந்த மாதிரிக் காண்பித்தாக. வேன்டியிருந்தது. எஸ். பி. எஸ். இன்னும் இரண்டு மூன்று பேர்களைச் சேர்த்துப் பன்னிரண்டு பேர் வரையில் கூப்பிட்டுக் கொன்டு போது வேன்டும் என்று ஆசைப்பட்டார். ஆளுல் ஒன்பது பேருக்குத்தான் அநுமதி கிடைத்தது. அதற்கு மேல் எவ்வ ளவோ முயன்றும் முடியவில்லை, புறப்படுவதற்கு முன் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்திகளும் விளம்பரங்களும் தடபுடல் பட்டன.

  • எஸ். பி. எஸ், புரொடக்ஷன்லாரின் மாபெரும் தயாரிப்பு. கவர்ச்சிக் கன்னி சுலபா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படப்பிடிப்பு ஆக ஏற்பாடு"-என்று விளம்பரமாயிற்று. அந்நியச் செலாவணிப்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/33&oldid=565701" இலிருந்து மீள்விக்கப்பட்டது