பக்கம்:சுலபா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 &&\)Liir

நத்திங் இஸ் இம்பாஸிபிள்' என்று பேசக்கூடிய பெருமை யைத் தந்திருந்தது.

"உலகில் சந்தோஷமாக இருக்க ரெண்டு வழிங்க இருக்கு. மத்தவங்களைக் கஷ்டப்படுத்திச் சந்தோஷம் அட்ை யிறது ஒண்ணு. அதிலே எனக்கு நம்பிக்கை இல்லே. மத்தவங்களைத் தாராளமாச் சந்தோஷப் படுத்தி நாமளும் சந்தோஷமா இருக்கிறது இன்னெண்ணு. இந்த ஃபீல்டிலே இன்னிக்கி இந்த ரெண்டாவது வழிதான் எனக்குப் பிடிச் சிருக்கு' என்று எஸ். பி. எஸ். தம் வாழ்க்கை பிலாஸ்பியைத் தாமே எப்போதாவது ரொம்பவும் வேண்டப் பட்டவர்களிடம் சொல்வது உண்டு.

"ஒரு முழுப் புரொடக்ஷனுக்கு ஆகிற செலவுகளை ரெண்டு மூணு லொக்கேஷன் ஷாட்டுக்காக வீணுக்கனுமா?" என்று எஸ். பி. எஸ்.ஸின் நண்பர் ஒருவர் அவர் தம்முடைய யூனிட்டோடு வெளிநாடு புறப்படுவதற்கு முன் கேட்டார்.

விரயம் தான் நஷ்டம். இது வெறும் விரயமில்லே, சுயவிரயம். இதுலே நஷ்டம் வராது" என்று சுருக்கமாகப் பதில் சொன்னர் எஸ். பி. எஸ். சுபவிரயம்' என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதைவிடி வேடிக்கை என்ன வென்ருல் முழு யூனிட்டுக்கு மான வெளிநாட்டுப் பயண உடிைகள் எடுக்கத் தைக்க-என்று எல்லாச் செலவுகளையும் அவரே பார்த்துக் கொண்டார்.

யூனிட் முதலில் லண்டன் போய்விட்டு அங்கே மூன்று நாள் தங்கியபின் அப்புறம் பாரிஸ் போவது என்று ஏற்பாடாகி இருந்தது. ...

ஒவ்வோர் இடத்திலும் படிப்பிடிப்பு வேலைகள் மிகச் சில மணி நேரங்கள் தான். ஷாப்பிங், ஊர் சுற்றிப் பார்த்தல் ஆகியவற்றுக்கே அதிக நேரம் செலவாயின. - -

லண்டனில் அவர்கள் இரண்டு ஹோட்டல்களில் தங்கி ஞர்கள். சுலபா, கவிதா, ஆடிட்டர், எஸ், பி. எஸ். நால்வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/36&oldid=565704" இலிருந்து மீள்விக்கப்பட்டது