பக்கம்:சுலபா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 87

ரசம், இந்திய சாம்பார் எல்லாம் கிடைக்காதது போல இந்தி யக் குணங்களும் காணக் கிடைக்கவில்லை இங்கே.

காதுத் தோட்டுக்கும், மூக்குத்திக்கும் வைத்துக் கட்டுவ, தற்கு நல்ல ப்ளுஜாக்கர் வைரம்-பெல்ஜியம் கட்டிங் உள்ள தாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்ருள் சுலபா,

யூனிட்டில் மற்றவர்களை எல்லாம் பாரிஸிலிருந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டுச் சுலபர், கவிதா, கனகசபாபதி, எஸ். பி. எஸ். நால்வரும் வைரம் வாங்குவதற்காக ஆம்ஸ்டர்டாம் சென்ருர்கள்.

திரும்பிய பின் கனகசபாபதி கூறியது போலவே சுலபாவை இந்த வெளிநாட்டுப் பயணம் மாற்றியிருந்தது. அவள் உற்சாகமாகவும் விரக்தியற்றும் இருந்தாள். புகழுக்கிாக வும், கூடி நிற்கிற துதிபாடிகளுக்காகவும் ஏங்கினுள். வைரம் தேர்ந்தெடுத்து வாங்க ஆசைப்பட்டாள். ஸ்விஸ் கிரெடிட் வங்கியில் இரகசிய எண்கணக்கு வைத்துக்கொண்டாள். எஜமானிக்கு வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்க இந்தப் பயணம் பயன் பட்டதைக் கவிதா உணர்ந்தாள்.

லண்டனில் இரண்டு காட்சிகளும், பாரிஸில் இரண்டு. காட்சிகளும் எடுத்து முடித்ததுமே படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடாத-சடங்கு போன்ற-எந்த இடைஞ்சலும், அசெளகரியமுமற்ற அந்தப் படப்பிடிப்புகள் சுளுவாக முடிந்து விட்டன. எல்லாரும் ஊர் சுற்றுவது-பாரிஸ் பை நைட்-பஸ்டிரிப், ஷாப்பிங் போவது ஆகிய வேலைகளைத் தான் உற்சாகமாகச் செய்தார்கள்,

எஸ். பி. எஸ். புரொடக்ஷன் லார் பாரிஸில் படிப்பிடிப்பு -லண்டனில் சுலபா-என்று செய்திகளே முன் கூட்டி ஊரி லிருந்து புறப்படும் போதே எழுதிக் கொடுத்தபடி தமிழ்த் தினசரிகள் பிரமாதமாக நாலுகாலம் தலைப்போடு பிரசுரித்து ஊரையே கலகலக்கப் பண்ணிக் கொண்டிருந்தன. அவர்கள் யூனிட் வெளி நாட்டில் இருந்த இருபது நாளும் வெளிவர்

சு-8 ->

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/39&oldid=565707" இலிருந்து மீள்விக்கப்பட்டது