பக்கம்:சுலபா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சுலபா

மேனைக் குறை கூறியதும் அவர் இருதலைக் கொள்ளி எறும் பாகத் தவித்துப் போளுர் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. அவளோ முரண்டு பிடித்தான். தயாரிப்பாளர் கெஞ்சினர்:

  • நாட்டிலே இன்னிக்கி முன்னணியிலே இருக்கிற ரெண்டு மூணு புகழ்பெற்ற காமிரா மேன்களிலே அவரும் ஒருத்தராச் சுங்களே மேடம்! நீங்கதான் கொஞ்சம் பெரியமனசு புண்ணணும்'

"அப்போ நாங்கள்ளாம் நாட்டிலே உள்ள புகழ்பெருத ஆளுங்களா? இல்லே பத்தோடப் பதினெண்ணுங்கிற மாதிரி ஆளுங்களா? நீங்க சொல்றதைப் பார்த்தால் அதுமாதிரித் தொனிக்குதே?"

'அய்யய்யோ! நான் அந்த மாதிரி அர்த்தத்திலே சொல்லலே அம்மா. ஒரு ஆங்கிளை’ அவர் சரியான "ஆங்கின்’னு முடிவு பண்ணியிருந்தா அது படத்துக்கு உப யோகமானதாகத்தான் இருக்கும். தப்பா எதுவும் இருக்கா தேன்னு...?"

"அவரு பெரிய ஆளாளு அது அவர் மட்டிலே...எனக்கு அந்த ஆங்கிள்" பிடிக்கலேன்ஞ அவர் ஏன் கேட்கமாட்டேங் கிருரு?"

அவன் குரலில் கடுமையும் முரண்டும் ஏறின. அவருக்குப் பயமாயிருத்தது. தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் வீம்புக்காக அவன் தலையிடுகிருள் என்று அவருக்குப் புரிந்தா லும் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தது.

"இவளநடைய நடிப்பு ஏதோ ஒர் இடத்தில் சரியில்லை’ என்று காமிராமேன் கூற முன் வந்தால் அதற்கு இவள் என்ன மதிப்பளிப்பாள் என்று எண்ணிப்பார்த்தார் அவர். அப்படித் தன் நடிப்பைப் பற்றி மற்ருெருவர் அபிப்ராயம் சொல்ல முன்வருவதையே அவள் சகித்துக் கொள்ள மாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/46&oldid=565714" இலிருந்து மீள்விக்கப்பட்டது