பக்கம்:சுலபா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.பா. 45

டாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆளுலும் மற்றவர்கள் விஷயத்தில் அதிக உரிமை எடுத்துக்கொண்டு தலையிட அவள் சிறிதும் தயங்கவில்லை. படிப்பறிவும் காரணகாரியச் சிந்தனையுமற்ற அவளுடைய ஈகோ'வின் கூர்மை பனங்கருக் குப் போல எதிர்ப்படுகிறவர்களேத் தாறுமாருக அறுக்கக் கூடியதாயிருந்தது . இவளையும் விரோதித்துக் கொள்ள முடியாது. காமிராமேனயும் விரோதித்துக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இரண்டு பேரையுமே சமாளித்தாக வேண்டும் என்று முடிவு செய்தார் தயாரிப்பாளர். காமிராமேன் எடுத்துச் சொன்குல் கட்டுப்படுவார். கேட்டுக் கொள்வார். ஆகவே அவரிடம் இதமாகப் பேசிப் பார்த்து அவர் மூலமே இவளை வழிக்குக் கொண்டு வருவதென்று முடிவு செய்தார்.

காமிரா மேனச் சந்தித்தார். தம் நிலையை விளக்கினர். காமிராமேனுக்குப் புரிந்தது.

"சார் இது லைக்கலாஜிகல் டிஸ்பியூட்! இதை எந்த ஆங்கிள்லே சரிப்படுத்தறதுங்கிறதை எங்கிட்டவே விட்டுடுங்க. நானே சரிப்படுத்திடறேன். வேற ஒன்னுமில்லே! அந்தம்மா வோட 'ஈகோ'வை நான் ஒத்துக்கிறேளு இல்லையாங்கிறது தான் அவங்க கேள்வி. அந்த ‘ஈகோ'வை நான் எதிர்த்துச் சர்ச்சை செய்ய மாட்டேன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாலே என்னை விட்டுடுவாங்க . .

"படிச்சவங்களோட ஈகோவாவது வெண்ணெயிலே இறங்கிற கத்திமாதிரி ஒசைப்படாமச் சிதருமல் அறுக்கும். படிக்காதவங்க ஈகோவோ பனைமடல் மாதிரி இரத்தம் சிந்த வச்சிரும்' . .

"சரியாச் சொல்றிங்க இந்தம்மாவோட வீம்புக்கும் ஈகோவுக்கும் காரணமே அவங்களோட தாழ்வு மனப்பான்மை தான். அதை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். எங்கிட்ட விட்டுடுங்க நானே அவங்களைச் சந்தித்துப் பேசிச் சரிப்படுத் திக்கிறேன்' என்று காமிராமேன் நம்பிக்கையோடு உறுதி கூறிஞர். உலக அநுபவம் மிக்கவரும் சுலபாவை விட வயது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/47&oldid=565715" இலிருந்து மீள்விக்கப்பட்டது