பக்கம்:சுலபா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 63

காமல் குலுங்காமல் மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறே! காரிலே கூட்டிக்கிட்டுப் போய்க் காரிலேயே வீட்டு வாசல்லே கொண்டுவந்து டிராப் பண்ணிடரு. கோடிக்கணக்கிலே வெள்ளையும் கறுப்புமாகச் சொத்தைச் சேத்து வச்சுட்டுப் பூதம் காக்கிறமாதிரித் தனியே காத்துக்கிட்டிருக்கா...

உனக்கோ இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலே கலியான ஏற்பாடு எதுவும் நாம பன்னப் போறதில்லே. அதுவரை பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுமையா இருந் துடேன். கலியான ஏற்பாடுன்னு வர்ரப்போ நானே சுலபா கிட்டப்போயி, ""நாளையிலேருந்து கவிதா வேலைக்கு வரமாட் டாள்"னு சொல்லிடறேன். அதுவரை எனக்காகப் பொறுத்துக்கோ! ஆம்பளை செகரெட்டிரி அவளுக்குப் பிடிக்காது. வேற பொம்பளைங்களை விடிறது நம்பிக்கையில்லே. என் இண்ட்ரஸ்டிலேயாவது நீ அங்கே இருந்தாகனும். அவளோட நம்பர் டு அகவுண்ட் பணத்திலே என்ளுேட க்ளே யண்ட்ஸ் நெறையப் பேர் கடன் வாங்கியிருக்காங்க. நான் சம்பந்தப் பட்டிருக்கேன்" இவ்வளவும் கேட்டபின் வேறுவழி யின்றி சரி மாமா! பொறுத்துக்கிறேன்' என்பாள் கவிதா. விரக்தியையும் ஆசைகளையும் பக்கத்தில் பக்கத்தில் வைப்பது, தளிரையும் நெருப்பையும் அருகருகே இருக்கச் செய்வதுபோல் தான். சுலபாவின் அருகே கவிதாவும் அப்படித்தான் இருந் தாள். சதா காலமும் சுலபாவின் விரக்தியான ஆன் எதிர்ப்புப் பிரசாரத்தைக் கேட்டுக் கேட்டு இளம் தளிராக இருந்த அவள் வெதும்பினுள் வாடிவதங்கினுள். சபித்தாள்.

ஒருநாள் சுலபா ஏதோ ஸ்டுடியோவில் படிப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அன்று லீவு போட்டிருந்த கவிதாவை டாக்ஸி ஸ்டாண்ட் அருகே ஓர் அழகிய இளைஞைேடு பார்க்க நேர்ந்து விட்டது. சுலபாவின் ஏ.சி. கார் கவிதாவின் அருகே வந்து ஓசைப் படாமல் நின்றது. 'நீ மட்டும் ஏறிக்கொள்' என்று கடுப்போடு அவளை அழைத்தாள் சுலபா என் கூட இன்னொரு நண்பர் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/65&oldid=565733" இலிருந்து மீள்விக்கப்பட்டது