பக்கம்:சுலபா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 &;&}LI

கிருர் அம்மா! இன்று நான் லீவு... நாளை உங்களைப் பார்க் கிறேன்' என்ருள் கவிதா.

  • யாரு டி அவன்?"

கவிதா இந்த ஆணவமான கேள்விக்குப் பதிலே சொல்ல வில்லை. நல்ல வேளையாகக் கவிதா ஏ.சி காருக்குள் உட்கார்ந்து கதவை அடைத்துக் கொண்டு எஜமானியம்மாளிடம் பேசி விட்டு வந்ததால் அவள் யாரு டீ அவன்?’ என்று கேட்டது வெளியே அவிதாவின் காதலனுக்குக் கேட்டிருக்க முடியாது.

மெல்ல ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கழற்றிக் கொண்டிாள் கவிதா, அந்த ஒரு நாள் அவளுடைய சுதந்திர மான தினம், எஜமானியின் விரக்தியில் இருந்து வெளி உலகத் தென்றலைத் தாராளமாக அநுபவிக்க முடிந்த நாள்.

"கூப்பிட்டால் போய்விட்டு வருவதுதானே?' என்ருன் அவன் காதலன். -

"ஐயோ போரடிச்சுக் கொன்னுடுவா... இன்னிக்கு நான் ബ്ലൂ

“இத்தனை பெரிய ஸ்டார் தெருவிலே பார்த்து ஏ.சி.

டயோட்ட வை அருகில் கொண்டு வந்து நிறுத்திப் பிரியமாக் கூப்பிடறப்பப் பிகு பண்ணிக்கிறியே?’’ -

'உங்களுக்குத் தெரியாது! அந்த ஏ.சி.க் காருக்குள்ளே ஒரே புழுக்கமா இருக்கும். அவங்க சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ரம்பமா அறுப்பாங்க

'நீ அவங்க கிட்டக் கொஞ்சம் மரியாதையா நடந்திட் டிருக்கணும் கவிதா' என்ருன் அவள் காதலன்.

அந்தப் பேச்சை மாற்றி அவனைத் தன் உலகுக்குவி கொண்டுவர அவள் மிகவும் சிரமப்பட்டுமுயல வேண்டியிருந் தது. லிவு போட்டுவிட்டு வந்தபின்னும்தேடிவந்து தன்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிட்ட எஜமானியம்மாள் மேல் கோபம் கோபமாக வந்தது கவிதாவுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/66&oldid=565734" இலிருந்து மீள்விக்கப்பட்டது