பக்கம்:சுலபா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to . . .

74 3:6մԼia',

"இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமாங்கிருப்ல நீ என்னமோ பெரிய டீ டோட்டலர் மாதிரிப் பேசறயேடி சுலபா?"

"உங்கூடச் சேர்ந்தப்புறம் எப்படி.டீ டீட்டோட்டிலரா இருக்க முடியும் கோகிலா?-"

கேள்வி எகத்தாளமாய் வந்தது.

"இது நான் உன்னைக் கேட்க வேண்டிய கேள்வியாக்கும். கொஞ்சம் இடம் கொடுக்கப் போக நீ முந்திக் கொண்டு என்னைக் கேட்கிருய்!'

-இப்படி வளர்ந்து முடிந்தது அவர்கள் உரையாடல். சுலபாவுக்குக் கோகிலாவுடன் தனி டின்னர் என்ருலேபடுகுஷி, கோகிலாவும் சரி அவள் புருஷனும் சரி படுசுதந்திரமான பேர்வழிகள், புருஷனை அவள் சுதந்திரமாக விட்டிருந்தாள். புருஷன் அவளைச் சுதந்திரமாக விட்டிருந்தான். தேவைக்கதிக மான சுதந்திரங்கள், பெர்மிஸிவ்னெஸ்கள் எல்லாம் உள்ள அமெரிக்காவிலோ, பிரான் ஸிலோ பிறந்திருக்க வேண்டிய தம்பதிகள். தவறிப்போய் இந்தியாவில் இருந்தார்கள். கோகிலாவும் சுலபாவும் சிநேகிதம் ஆனதே ஒரு வேடிக்கை

யான கதை. -

ஏதோ ஒரு மேல் மட்டத்துப் பணக்கார வீட்டுப் பார்ட்டி ஒன்றில் அறிமுகமானர்கள். கோகிலா நகைச்சுவையாகப் பேசிளுள். நிறைய செக்ஸ் ஜோக்குகளாகச் சொன்னாள். பிளேபாய் ஜோக்ஸ் நிறைய வந்தது. பெண்களில் இத்தனை வெளிப்படையான கலகலப்பான ஆட்களைச் சினிமா உலகில் கூட அவள் சந்தித்ததில்லை. அப்புறம் கோகிலா தன் வீட்டுக்கு ஒரு நாள் இவளைச் சாப்பிடக் கூப்பிட்டாள். இவளு டிைய பலவீனங்கள் அவளுக்குப் புரிந்தன. அவளுடைய பலவீனங்கள் இவளுக்குப் புரிந்தன. பரஸ்பரம் இருவரும் தவிர்க்க முடியாத சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். அந்தரங்கங் களைப் பகிர்ந்து கொண்டார்கள். கோகிலா அழகி மட்டுமில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/76&oldid=565744" இலிருந்து மீள்விக்கப்பட்டது