பக்கம்:சுலபா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

■ 零

கோகிலாவுக்கும் சுலபாவுக்கும் நெருக்கமான சிநேகிதம் இருந்தாலும் இருவருக்குமிடையே நிறைய வேறு பாடுகள் இருந்தன. கோகிலா மனத்தத்துவத்தில் பட்டதாரி, ஏராளமான ஆங்கில நாவல்களையும் உளவியல் நூல்களையும் படித்தவள். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவள். உலகப் புகழ் பெற்ற நாவல்கள், காப்பியங்கள், கதைகள், நாடகங் களின் கதாபாத்திரங்களையும் அவர்கள் பற்றிய திறனுய்வு நூல்களையும் படித்தவள்.

சுலப ஃபார்மல் எஜுகேஷனுக்காகத் தெலுங்குத் திண்ணைப் பள்ளிக் கூடத்திலும் ஒதுங்காதவள். அவளுடைய செல்வத்துக்கும் புகழுக்கும் பின்னல் கூட முறையான டிப்பு என்பது ஓரளவுதான் வளர முடிந்தது. அதற்குள் புகழும் பணமும் அதைவிட அதிகம் வளர்ந்து விட்டன.

அளவாய் அழகாய்ச் செதுக்கி எடுத்த தங்கச்சிலை போன்ற வனப்பும், முகவசீகரமுமே சுலபாவின் பெரிய முதலீடுகளாக அமைந்து அவளை முன்னுக்குக் கொண்டு வந்திருந்தன. படிப்பு இன்மை குறையாக உணரப்படாத அளவு செல்வம் அவளிடம் சேர்ந்து விட்டது.

தெலுங்கிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்துக் கூட்டி அவள் கையெழுத்துப் போடும் விதங்களை வைத்தே அவள் அதிகம் படிக்காதவள் என்பதைச் சொல்லிவிட முடியும். ரொம்ப வருஷங்களுக்குப் பின் தினத்தந்தி படிக்கப் பழகிக் கொண்டிாள். வீட்டுக்கு வருகிற ஆங்கில நாளிதழ்களைக் கவிதாதான் படிக்க வேண்டும். சுலபா படிப்பதாகச் சிலவேளை பாவிப்பாள்.

தன் உடலின் வசீகரமான வளைவுகளாலும் முகத்தின்

மோகனப் புன்னகையாலும் - பெண்ணுக்கு அதிக அழகு என்றும் கம்பீரம் என்றும் வர்ணிக்கத்தக்க எடுப்பான உயரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/79&oldid=565747" இலிருந்து மீள்விக்கப்பட்டது