பக்கம்:சுலபா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 79

சந்திப்புக்கள் பேச்சுக்களின்போது கவிதாவோ, நரசம்மாவோ கூட உடனிருக்க அவர்கள் அநுமதிப்பதில்லை. இந்தச் சந்திப்புக்களின் சுகங்களை இவர்கள் இருவர் மட்டுமே பங்கிட்டுக் கொண்டார்கள்.

சுலபா வெளிநாட்டில் படிப்பிடிப்பு ஏற்பாடுகள் முடிந்து திரும்பியதும் அவளும், கோகிலாவும் தங்களுக்குள் சந்தித்துக் கொண்டது சுவாரஸ்யமானதொரு சந்திப்பாக இருந்தது.

தன்னோடு வெளிநாட்டுக்கு வந்திருந்த யாருமே பிரயோசனமில்லை. கோகிலாவோடு வெளிநாடு போயிருந் தால் நன்ருயிருந்திருக்கும் என்று சுலபாவை உணரச் செய்து விட்டாள் கோகிலா. அவள் ஒவ்வொன்ருகச் சொல்லி அதைப் பார்த்தாயா? இங்கு போளுயா? அதெல்லாம் என்ஜாய்" பண்ணுமலா திரும்பி வந்தாய்?-என்று கேட்கக் கேட்கச் சுலபாவுக்கு ஒரே ஏமாற்றமாகவும், தவிப்பாகவும் போயிற்று. இவள் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வந்திருந்த பாரிஸ் நகரை விடக் கோகிலா ஆர அமரப் பலமுறை பார்த்து விட்டு வந்திருந்த பாரிஸ் கேட்கச் சுகமாயிருந்தது. இவள் பார்த்து முடித்த லண்டனைவிடி அவள் பார்த்து ரசித்து நினைவூட்டிய லண்டன் சுகமானதாயிருந்தது. அவள் இடங் களைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பார்த்திருந்தாள்.

"பாரிஸ் போயிருந்தியே பிகால் பார்த்தியா?"

"அப்படீன்ன?’’... "பிகாலுக்கு உன்னை யாருமே கூட்டிக்கிட்டுப் போகலி 山匣e?”” - - - -

போகலியோ எனக் கென்ன தெரியும்டி' "அப்படியானல் நீ பாரிஸைப் பார்க்கவே இல்லைடீ! இனிமேல் புதுசா என்ைேட ஒரு தடவை வந்து பார்த்தால் தான் உண்டு.” -

"உன்ளுேடப் பாரிஸைப் பார்க்கப் போறதுங்கிறது 9° பாரிஸைக் கைகோத்து உடனழைத்தபடி இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/81&oldid=565749" இலிருந்து மீள்விக்கப்பட்டது