பக்கம்:சுலபா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 81

அநுபவிக்க முடியும். மெட்ரோ ரயிலில ரவுண்ட் ட்ரிப்' டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு இஷ்டம் போல் சுற்றில்ை அங்கங்கே சுகங்களும், சந்தோஷங்களும் கேளிக்கை களும் இறைந்து கிடப்பது புரியும். கேளிக்கைகள் அதிகம் இறைந்து கிடிக்கிற இடம்தான் பிகால், 'மெளலின் ரோஜ்' போய்ப் பார்த்தியா? "பிகால்’லே ரெண்டு மூணு கேஸட்டிாவது வாங்கினியா? நாலஞ்சுஃப்ளோர் ஷோவாவது பார்த்தியா? பாரிஸ்ல என்னதான் பண்ணினே?"

"எஸ். பி. எஸ். சிரமப்பட்டு டிக்கெட் வாங்கி லிடிோவுக்குக் கூட்டிக் கிட்டுப் போளுர். அதுக்கு நேரம் கிடைக்கிறதே சிரமமாப் போச்சு, லேட் நைட் ஷோவாப் பார்த்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேசம்'

'அதெல்லாம் இருபது வருசத்துக்கு முன்னுடிப் பாரிஸ் போனவன் பார்த்தேன்னு சொல்லிப் பீத்திக் கிட்டிருக்கிற பழைய விவகாரம்! எய்ட்டீஸ்ல ஒருத்தன் சொல்லிக்கிறதுக்கு லைஃப்ஷோ, மெளலின் ரோஜ்னு எத்தினி எத்தினியோ புதுசா வந்திருக்கேடி?’’

"அதெல்லாம் எனக்கென்னடி தெரியும்? என்னைக் கூட்டிக்கிட்டுப் போனவங்க எங்கெங்கே கூட்டிக்கிட்டுப் போளுங்களோ அதெல்லாம் தான் நான் பார்த்தேன்'

சில சமயத்திலே கூட்டிக்கிட்டுப் போறவங்களும் கூடப் போறவங்களும் சேர்ந்து ரெண்டு குருடங்க யானை பார்த்த கதையா ஆயிடும். கூட வர்ாவருக்குப் பிடிக்குமோ பிடிக்கா தோங்கிற தயக்கத்திலேயும், கூச்சத்திலேயும் கூட்டிக்கிட்டுப் போறவங்களுக்குச் சிலதை விசாரிக்கவும், சொல்லவும் தோள் ருது. கூட்டிக்கிட்டுப் போறவர் தன்னைப் பத்தி என்ன நினைப் யாரோ என்ற தயக்கத்திலும், பயத்திலும், கூச்சத்திலும் கூடிப் போகிறவரே தன் ஆசைகளை உள்ளே புதைத்துக் கொள்வது உண்டு. நம்மிடையே வேஷங்கள் அதிகம். வேஷங்களைப் பிறர் முன் களைய நாம் விரும்புவதே இல்லை. தனியே நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/83&oldid=565751" இலிருந்து மீள்விக்கப்பட்டது