பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

9


கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெருத் திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.

பிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக்கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பான். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள்-மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.

அவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸ்டரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் அந்தஸ்தைப் பறையடிக்கின்றன!

உதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை. மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டுமணிக்குத்தான் வருவாள்.

கிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில, கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள், ஒரே மகன் ‘டுன்’ பள்ளியில் படிக்கிறான்.

“குட்மார்னிங் ஆன்டிஜி...”

“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.

அவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா? இல்லை, சொல்லப் போனால், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மீதப்பவர்கள். குட்டை முடி, உதடு. நகங்களில் பளிர்ச் சிவப்பு,