பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சுழலில் மிதக்கும் தீபங்கள்


நடைபாதைப் பழக்கடைகள் உள்புறம் கடையோரங்களில் நிற்கும் சொகுசுக்காரர்கள், வண்மை கொழிக்கும் மக்களின் தேவைக்கான பல பல பொருள்களும் விற்கும் அங்காடிகள்...

பஸ்ஸிலிருந்து அவள் இறங்குகையில் ஸ்கூட்டரில் வரும் சிவலால் பையன் பார்க்கிறான். ‘நமஸ்தே ஆண்டி’ ஊருக்குப் போயிருந்தீர்களா?

‘ஆமாம், எங்கே ஃபாக்டரிக்கா?’

சகஜமாகப் பேசுகிறாள்.

முனிசிபாலிடி பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தை களின் அணி ஒன்று சாலையை கடந்து போகிறது. ‘ஆன்டி’ என்று ஒரு குரல்.

ஒ, மாயாவின் பையன் தனு...!சாதாரணமாகக் குரல் கொடுத்துக் கூப்பிட மாட்டான். இவளைக் காணவில்லை என்று வீட்டில் கலவரம் நிகழ்ந்திருக்க வேண்டும். இளநீல குடிதார்பைஜாமாவில் சுஷ்மா கல்லூரிக்குக் கிளம்பிச் செல்கிறாள். தெரிந்த முகம். பளிச்சென்று ஒரு சிரிப்பு; நின்று பார்வை. ‘மார்னிங்...!’ இவளுடைய தெரு...வழக்கம் போல், எந்த நேரத்திலும் உண்ட களைப்பின் சோம்பலைக் காட்டும் படி காட்சி அளிக்கும். ஒவ்வொரு சுற்றுச் சுவருக்குள்ளும் பூதங்களைப் போல் மூடிக்கொண்டு இரண்டு மூன்று கார்கள் ‘கண்ணாடி பதித்த பெயர்ப்புரைகள்...‘சந்தனா’வின் சொந்தக்காரி, பிதுங்கி விழும் வெண் சதையுடன் வாசலுக்கு நேராகக் காலையுணவு அருந்துகிறாள். இந்தத் தெருவை இவ்வளவு நின்று நிதானமாக இவள் பார்த்ததில்லை. பழைய பிரிகேடியர் விக்ரம்கிங், வாயிலிலுள்ள அழகுக் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறான். இவளுக்குப் பேசிப் பழக்கமில்லை. என்றாலும் நின்று ஒரு மலர்ச்சியுடன் பார்க்கிறான்.

‘ஓ கவி கி மா? ஊருக்குப் போயிருந்தீர்களா?...’ என்று ஸூனு ஓடி வந்து கேட்கிறாள். எதிர்வீட்டு மருமகள், ஏதோ அலுவலகத்தில் ரிஸப்ஷனிஸ்ட்.