பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

95


‘ஒ...ஆமாம்...’ ஆயிற்று. வீட்டு வாசலில் பத்திரிக்கை படிப்பவன் கதவு ‘கிளிக்’கென்று செய்யும் ஓசை கேட்டு எட்டிப்பார்க்கிறான்.

‘ஆயியே! ஆயியே!...எங்கே போயிருந்தீர்கள்? வீடு ஒரே அமர்க்களமாயிட்டது?...’

அவள் நிற்கவில்லை. விடுவிடென்று படி ஏறுகிறாள். கதவு திறந்தே இருக்கிறது. ஒருவரும் பள்ளிக்குச் செல்ல வில்லை. பரத் தான் முதலில் இவளைப் பார்க்கிறான்.

அம்மா என்று ஓடிவருகிறான். ‘அம்மா வந்துட்டா! அம்மா வந்துட்டா...’

‘அம்மா? நீ கெட்டுப்போயிட்டே, இனிமே வர மாட்டேன்னு சொன்னா. எப்படிம்மா கெட்டுப் போனே?...’

நெஞ்சில் கத்தரிபட்டுத் துண்டானாற்போல் துணுக்கென்று நோகிறது. குரல்கேட்டு, கோடுபோட்ட பைஜாமா அங்கியுடன். முகச்சவரம் செய்யும் கோலத்துடன் சாமு நடையில் வருகிறான். அவள் உறுத்துப் பார்த்தாள். ‘குழந்தை கிட்ட யார் இப்படிச் சொன்னது?’

‘அம்மா...வந்துட்டா, கிடைச்சுட்டா, அம்மா கெட்டுப் போகல...’ அவள் பரத்தின் தலையைத் தடவிக் கொண்டு, நிற்கிறாள். ஏனோ அவன் பார்வையின் கடுமை அவள் சரளத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

‘எங்கே போயிட்டு வரே?...’

‘ஹரித்துவாரம் போயிருந்தேன். குழந்தைகிட்ட இப்படியா இரண்டர்த்தச் சொவ்லெல்லாம் சொல்லுவது!’

‘பின்ன எப்படியடி சொல்ல? தொலைஞ்சு போனா கெட்டுப் போனான்னுதானே சொல்லனும்?’

இவனுடைய இந்தக் குரலை அவள் இதற்குமுன் கேட்டதில்லை. ஆணைகளான கட்டுக்களைத் தகர்த்தால் என்ன