பக்கம்:சுவடி இயல்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

சுவடி இயல் வடிகளின் பொருள். இதில் அமைந்த பாடம் இவர்க்கு என்பதாகும். இவற்கு என்பதைப் பாடமாகக் கொண்டால், இருவரையும் காட்டி, இவனுக்குத் தந்தையும் தாயும் நீயே என்று கூறினான் தசரதன் என்பதே பொருளாகிவிடும். ஒருமை பன்மைத் தொடர்கள் மயங்கி இலக்கணப்பிழை ஏற்படுகிறது. எனவே இவர்க்கு என்பதே பிழையற்ற பாடமாகிறது. ஒருமை - பன்மை - பெண்பாலுள்

வேறு:

66

நல்லோள் கணவன் இவனென "நல்லோர் கணவன் இவனென

87

அரிவையை நான் பெறுவேனாக; அதனை இவ்வூரார் அறிவாராக; நல்லோள் கணவன் இவன் என்று சொல்வாராக என்னும் பொருள் தந்து நிற்பன இப்பாடலின் பிற அடிகள். அரிவையாகிய நல்லோளின் கணவன் கணவன் இவன் என்பது பெண்பால் உணர்த்தும் நல்லோள் என்ற சொல்லுடன் தொடர்ந்த தொடராகும். நல்லோர் என்பது உயர்திணைப்பன்மையாகி, பலருடைய கணவன் இவன் என்னும் பொருள் தந்து பொருத்தமற்ற தொடராகி

விடுகிறது. எனவே, நல்லோள் கணவன் என்பது

முடைய பாடமாகும்.

ஒருமை பன்மை - தன்மையிடத்தில்

வேறு:

இலக்கண

"யென்போல் பெருவிதுப் புறுக இம் மையலூரே”68 "யெம்போல் பெருவிதுப் புறுக...

யான் அஞ்சுவல்; என்போல் இவ்வூர் விதுப்புறுக என்பது பாடற் பொருள். யான் அஞ்சுவல் என்று தன்மை ஒருமையில் தொடங்கிய பின் எம்போல் விதுப்புறுக என்று தன்மைப்பன்மையில் முடிப்பது முறையன்று. ஆதலின் என்போல் என்பது முறையான

மாகும்.

ஒருமை - பன்மை - அஃறிணையில்

அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு"0

வேறு: தாஅய வெல்லாம் ஒருங்கு

தாயது-தாய (தாயவை) என்பன வேறுபாடுகள்.

பாட

எல்லாம் என்ற

முடிபுச் சொல்லால் தாயவை என்பது சரியான பாடம்

67.

68.

70.

குறுந்தொகை, 14.

புறநானூறு, 83. 69. குறள்,610. பரிமேலழகர். குறள் 610, பழைய உரையிற் காணும் பாடம்.

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/198&oldid=1571279" இலிருந்து மீள்விக்கப்பட்டது