பக்கம்:சுவடி இயல்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

சுவடி இயல்

துள்ள முறையிலும் கருத்துவேறுபாடு தோன்றியுள்ளது என்பதைச் சுட்டுகின்றன. இவற்றால் 'மூலபாடம்' என்பது பதிப்பாசிரியரின் அல்லது ஆய்வாளரின் கருத்திற்கேற்ப அமையும் சிறந்த பாடமே தவிர நூலாசிரியரின் பாடம் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.

"மூலபாடம் என்பது விளங்காத, உயர்ந்த சொல் அன்று; காரணத்தோடு கூடிய பொது அறிவினை உடையது. தவறாக அச்சானவற்றை நாம் காணும்போது உடனே திருத்துகிறோம். அங்கேயே மூலபாட ஆய்வு தொடங்கிவிடுகிறது. பழக்கத்தி னால் இக்கலை வளர்ச்சியடைகிறது, ஆனால் மறதி உள்ளத்

தில் இது முழுமை அடைவதில்லை’79 என்னும் கருத்து நினைவு கூரத்தக்க தாகும்.

79. Art and Error. PP. 1-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/202&oldid=1571283" இலிருந்து மீள்விக்கப்பட்டது