பக்கம்:சுவடி இயல்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

277

ஆனால் 155

மெக்கன்சி சுவடிகள் : காலின் மெக்கன்கி திரட்டிய சுவடிகள் 1379 என்பது அரசினர் சுவடி நூலக எண்ணிக்கை. சுவடிகள் கூடுதலாக உள்ளன என்று இராசேந்திரனின் ஆய்வேடு எடுத்துக் காட்டுகிறது. வரலாறு, இலக்கியம், மதம் போன்ற பல துறைகளுக்கான சுவடிகள் சுட்டிக் காட்டப்பெற்றுள்ளன. அவற்றுள் மிகச் சிலவே முழுமையாக வெளியாகியுள்ளன. பிற அனைத்தும் வெளியிடப் பெறாதவை; ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக வெளியிடக்கூடிய பல சுவடிகள் உள்ளன. இவை பதிப்பாசிரியருடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பெற வேண்டிய வை எனலாம். அதே சமயம் தமிழ்நாடு அரசும் இச்சுவடிகளில் நோக்கஞ் செலுத்த வேண்டும்.

வடசொல் : சுவடிப் பதிப்பில் வழிகாட்டிய அறிஞர் பலரும் நல்ல பல தமிழ்ச் சொற்களுக்கு வடசொல்லில் உரை, யெழுதி யுள்ளனர். அது அவர்கள் காலத்து மொழிநிலை எனக்கொண்டு இக்காலத்து அவை தவிர்க்கப்பட வேண்டும். முன்னோர் உரை களுள் சில :

பிறைவடம்

சூழ்ச்சி

சந்திரஹாரம் (சீவகசிந்தாமணி-171) தந்திரம்

(மேற்படி.187)

ஆபரணம் (மேற்படி, 237)

சோர்வில் பொருள் - பஞ்சநமஸ்காரம்

கலம்

ஐம்பதம்

பிச்சை

பிக்ஷை

உருவிலாளன்

ஊழிமுதல்வன்

(மேற்படி-933,951)

(மணிமேகலை, பதிகம்- 62)

அநங்கன் (மேற்படி, 5: 6)

மஹாப்ரஹ்மா (மேற்படி, 6:172)

தலைப்படுதானம் உத்தமதானம் (சிலம்பு, 2:3)

பல்லாற்றானும்

சிறப்புற வேண்டிய சுவடி இயல்' கொள்கை களைப் பதிப்பாசிரியர் பலரும் நுணுகி ஆய்ந்து தரமான பதிப்பு களைக் கொணர்வதில் முனைதல் இன்றியமையாத ஒன்றாகும்.

அரசின் துணை : சுவடிப் பதிப்புகள் வளர, நம் நாட்டைப் பொறுத்தவரை இரண்டு நிலைகளில் அரசின் துணை தேவைப் படுகிறது, ஒன்று பதிப்பில் நிதி உதவி; மற்றொன்று விற்பனையில் உதவி சிறந்த நூல்களைப் பதிப்பிக்கும் திட்டத்தின்கீழ் சுவடிப் பதிப்புகளுக்குத் தாராளமாக நிதி உதவி செய்வது இன்றியமையாத தாகும்.

3.

அவ் உதவி முறையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது மெக்கன்சியின் தமிழ்ச்சுவடிகள் ஓர் ஆய்வு, பக். 245.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/293&oldid=1571377" இலிருந்து மீள்விக்கப்பட்டது