பக்கம்:சுவடி இயல்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

சுவடி இயல்

பயன்தரும். விற்பனை உதவியே பதிப்பாசிரியருக்கு ஊக்கத்தை அளிப்பதாக அமையும்.

பதிப்பின் விலை குறைவிற்காகவும் நல்ல இலாபம் பெறுவதற் காகவும் ஐயாயிரம், பத்தாயிரம் படிகள் வெளியிடத் துணியலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு உருவாகும் நூல்களை மாவட்டப் பொது நூல்கங்கள், ஊராட்சி மன்ற நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் ஆகிய யாவும் ஆகிய யாவும் வாங்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாக வேண்டும்.

சான்றாக, தமிழ்நாட்டின் பொதுநூலக அமைப்பின்கீழ் 1501 நூலகங்கள் பணியாற்றுகின்றன. அவற்றுள் நகரப் பகுதிகளில் உள்ளவை 500-க்கு மேற்பட்டவை. நசரப் பகுதியில் உள்ள கிளை களுக்கு 2, 3 நூல்கள், பிறவற்றிற்கு ஒருநூல் என்ற திட்டப்படி வாங்கினால் வெளியாகும் ஒவ்வொரு நூலிலும் இரண்டாயிரம் படிகள் உடனடியாக விற்பனை ஆகிவிடும். உ பிற நூலசங்களின் மூலம் இரண்டாயிரம் படிகள் எளிமையாக விற்பனை ஆக வழி உண்டு. இந்த முறை அரசினரால் கட்டாயப்படுத்தப்படுமாயின் பதிப்பாசிரியர் பெரும் பயன்பெறுவர். பதிப்புகள் தொடர்ந்து வெளியாகும்.

விளம்பரம்: நூலை வாங்கும் எண்ணம் இருப்பினும் நூலைப் பற்றி அறிய இயலாத நிலை இருந்து வருகிறது. நல்ல விளம்பரம் இருப்பின் விற்பனை உயரும்,

“ருஷ்யர்கள் புத்தகம் என்றால் என்ன விலையானாலும் வாங்கிவிடுவார்கள்... எங்கள் நாட்டில் புத்தகங்களுக்கு அதிக விளம்பரம் செய்கிறோம்" என்னும் மாரத் எஸ்.கிக் மாதுலவ் என்பாரின் கூற்று இங்கு சுட்டத்தக்கதாகும்.

நடைமுறை : அரசினர் சுவடி நூலகத்தில் ஒரு நூலில் 500 படிகளே போடப்பட்டன. விளக்க அட்டவணைகளாயின் 200. 300 என்ற அளவிலேயே அச்சிடப்பட்டன. அதனாலும், அரசு அச்சகக்கட்டுப்பாடுகளாலும், இலாபமில்லாத நிலையிலேயே மிகுதியான விலை நிர்ணயமாயிற்று. மூவருட விளக்க அட்டவணை (1270 பக்கங்கள்) 11 ஆம் தொகுதி ஒன்றின்விலை ரூபாய் 245 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பல பதிப்புகள் கிராமங்கள் வரைபரவும் செயற்பாடு உருவாகவில்லை. எனவே நாடி சோதிடம் போன்ற சுவடிப்பதிப்புகள், வெளியிடப்பட்டு 25 ஆண்டுகள் 4. கல்கி, 6-8 1978. பேட்டிக்கட்டுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/294&oldid=1571378" இலிருந்து மீள்விக்கப்பட்டது