பக்கம்:சுவடி இயல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

55

இரசவாதம் : அகத்தியர், இராமதேவர், தட்சிணாமூர்த்தி ஆசிரியர் பெயரால் தண்டகம், பட்சணி, பரிபாஷை,

ஆகிய

பரிபூரணம் என்னும் நூல்கள் பல இவ்வகையில் உள்ளன.

இலக்கணம் : தமிழ்ச் சுவடிகளில் ஐவகை இலக்கணங்களும் காணப்படுகின்றன. உவமான சங்கிரகம் உவமைக்குரிய தனிநூல். இலக்கிய அமைப்பைக் கூறும் பாட்டியல் நூல் சுவடிகள்; பிற மொழியைக் கற்பிக்கும் லத்தீன் போதகத் தமிழிலக்கணம் ஆகிய வையும் இவ்வகையைச் சார்ந்தவை.

புராணம்

இலக்கியம்: பேரிலக்கியம், சிற்றிலக்கியம், புராணம் என்ற மூவகையில் இலக்கியச் சுவடிகள் சுவடிகள் உள்ளன. சிற்றிலக்கியங்களுள் சுமார் முப்பது வகைக்கான சுவடிகள் கிடைக்கின்றன. என்பது புராணம். இதிகாசம், மகாத்மியம், தலபுராணம் என்ற பெயர்களில் வகைப்படுத்தப் பெற்றுள்ளது. அட்டாதசபுராணாதி விஷய விவரணம், இலிங்க புராணம், கந்தபுராணம், கூர்மபுராணம் போல்வன புராணம் என்ற பெயராலும், இராமாயணம், பாரதம், பாரதவெண்பா, குசலவர்கதை முதலியன இதிகாசம் என்ற பெயராலும், அருணாசலபுராணம், ஆவிடையார்கோயில் ஆறுகாடுமகாத்மியம், உத்திரகோசமங்கைத்தல புராணம், ஸ்ரீரங்க மகத்துவம் முதலானவை மகாத்மியம் அல்லது தலபுராணம் என்ற பெயராலும் வகைப்படுத்தப் பெறுகின்றன. அறநெறிச்சாரம், ஆசாரக் கோவை, னியவை நாற்பது, இன்னா நாற்பது, நல்வழி, நன்னெறி, நீதிசாரக்கரு, பஞ்சதந்திரம், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, வாக்குண்டாம், வெற்றிவேற்கை என்னும் சுவடிகள் நீதி இலக்கியம் என்ற பெயரால் வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

புராணம்,

கணிதம் :

அளவைவாய்பாடு, எண்சுவடி,

எண்சுவடி, கணக்கதிகாரம், கணிதநூல், கணிதாமிருதம் என்னும் பல பெயர்களில் பலவகைக் கணித நூற் சுவடிகள் அமைகின்றன.

சமயம் : சமணம், சைவம், வீரசைவம், வைணவம்

ஆகிய

சமய நூல்கள் சுவடி வடிவில் வடிவில் உள்ளன. ஆன்ம நிர்ணயம், கித்தேரியம்மாள்சரிதை, கிறிஸ்துமத சிகாமணிமாலை. ஞாயிற்றுக்கிழமை

ஏதுமனுஷாவதாரம்,

சித்தாந்தம், தெய்வசகாய

புதுமைவிவேகம் ஆகிய கிறித்தவ சமய நூல் சுவடிகளும்,

அமானல்லாகதை, அமீன்தோத்திரம் ஆகிய முகமதிய சமய நூல் சுவடிகளும் சமய நூல் சுவடி வகையைச் சார்ந்தவையாகும்.

ஜாலம் : அகத்திபர் ஜாலத்திரட்டு, ஜாலநிகண்டு ஆகிய சுவடிகள் ஜாலம் பற்றிய சுவையான செய்திகளைத் தருவனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/71&oldid=1571143" இலிருந்து மீள்விக்கப்பட்டது