பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதனைத் தமிழ்நாட்டு வரலாற்று நகர அமைப்புடன் பொருத்திப் பார்க்க இயைபு உள்ளது. மொகஞ்சோதரோ நகரம் இரு பிரிவுகளாகக் காணப் படுகின்றது. ஒன்று கோட்டை கொத்தளங்கள் கொண்ட மன்னன் வாழ் பகுதி. மற்றொன்று மக்கள் வாழ் பகுதி. இவ்வமைப்பைத் தமிழகத்துத் தொன்மைத் துறைமுக நகரமான பூம்புகார் அமைப்புடன் ஒப்பிடலாம். பூம்புகார் மன்னன் வாழ்பகுதி பட்டினப்பாக்கம்’ என்றும், மக்கள் வாழ் பகுதி 'மருவூர்ப்பாக்கம் என்றும் வழங்கப்பெற்றன. இது அழிந்ததும் தோன்றிய நாகர்பட்டின நகரமும் இஃதேபோன்று நாகர்பட்டினம் என்னும் பட்டினப் பகுதியும், நாகர்ஊர்-நாகூர் என்னும் மருவூர்ப் பகுதியும் கொண்ட தாக அமைந்ததும் குறிக்கத்தக்கது. இவற்றுடன் மொகஞ்சதரோ நகரமைப்பு ஒத்திருப்பது கொண்டு தமிழகத்தின் சாயலைக் காண்கிறோம். இஃது ஒரு தொடர்பாலும் நிகழ்ந்திருக்கும். இத்தொடர்பு எழுத்துத் தொடர்பிற்கும் பொருந்தும். பூம்புகார் கி. பி. இரண்டாம் நூற்றாண்டளவில் கடலில் மூழ்கியது. அதன் வாழ்வுக்காலம் கி. மு. ஆகும். மொகஞ்சதரோவின் காலம் ஏறத்தாழக் கி. மு. 2400 எனப்படுகின்றது. இப்பொருத்தத்துடன் நோக்க மறைத் திரு ஈராசு கருத்து வலுப்பெறுகிறது. அதே நேரத்தில் மொகஞ்சதரோ எழுத்துக்குறிகள் எவ்வகையிலும் சமற்கிருத எழுத்துக்களின் தொடர்பு அற்றது என்று கண்டுள்ளமையும் கணக்கில் கொள்ள வேண்டியது ஆகும், எனவே, இதனாலும் பின்னடையும் சமற்கிருதம் தமிழை உலக முதன் மொழிக் களத்தில் முன்னுக்கு வைப்பதாக உள்ளது. தமிழ் வடமொழி வேர்ச்சொல் மொழியின் உயிர் ஊற்றம் அதன் வேர்ச்சொல்தான். தமிழ் அந்த உயிர் ஊற்றத்தைத் தெளிவாகவும், முதன்மையாகவும் கொண்டது. பிற எந்த மொழிச் சார்பும் இன்றித் தனக்கென ஒரு தனித்தகவு கொண்டது. தமிழ் வட மொழி வேர்ச் சொற்கள் பற்றிப் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தர னார் கொண்டு தந்திருக்கின்ற ஒரு கருத்து கொள்ளத்தக்கது. மொழியியலறிஞர்களில் குறிப்பிடத்தக்கோர் பர்ரோ, எமனோ என்னும் இருவர். . " பர்ரோ, எமனோ போன்றவர்கள் திராவிட மொழிகளை ஆர்ாய்ந்து வருவதோடு வடமொழியில் வேர் அகப்படாத வடசொற்களிற் பல 8?