பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளின் கண்களிலும் இடம் பெற்றான். இடம் பெற்று இமைகளை அசைத்து நிமிஷத்தை உண்டாக்கினான். இது நகைப்பிற்கு உரியது. 'நிமிடம் என்னும் தமிழ்ச் சொல்தான் சமற்கிருதத்தில் அவர்தம் பலுக்கலுக்கேற்ப ‘நிமிஷம் ஆகியது. தமிழில் டகரம் கொண்ட சொற்கள் வடமொழியில் ஷகரம் கொண்டதை மொழிஞாயிறு பாவாணர், மேழம்-மேடம்- மேஷம்; 'விடை-இடபம்-ரிஷபம்’ என்று காட்டியுள்ளார். எனவே, ‘நிமிஷம் என்னும் வடசொல்லாகக் கருதப்படுவது 'ருெமிளுதிமி-நிமி என்னும் தமிழ் வேர் கொண்டது. இவ்வாறே வடசொற்கள் மிகப் பல தமிழ் உதவிபெறுவதை அறிஞர்கள் பர்ரோ, எமனோ கண்டே, 'வடமொழி வேர் அகப்படாத வடசொற்களிற் பல திராவிட மொழிச் சொற்களாதல்’ என்றதை இந்த நிமிடத்திலும கண்டுகொள்ளலாம். இவ்வாறு வேர்ச்சொல்லின் தொடர்பாலும் வடமொழி தமிழுக்குக் கடன் பட்டதாகி உலக முதன் மொழிக் களத்தின் விளிம்புக்கு வந்து ஒதுங்குகின்றது. தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும் அதனதன் அடித்தளமான பொருட் குறிப் புள்ள வேர்ச்சொல் கொண்டு உருவானது. இச்சொல், இவ்வேரால் உருப்பெற்றது என்று அடையாளங் காட்டுவது போன்று முந்தைத் தமிழ்ப் புலவோர் தத்தம் பாடலில் சில தொடர்களை அமைத்துள்ளமை நோக்கத்தக்கது. . 'இம்மென இமிரும் (குறி. 147) என்றதில் இமிரும் (இனிமையாக ஒலிக் கும்) என்பதற்கு வேர் 'இம்' என்பது மூல ஒலி என்று சுட்டப்பெற்றுள்ளது. இதுபோன்றே, 'அண் அணித்து ஊராயின் (கலி. 108-36). அண்-அணி-அணிமை -அணித்து 'எல்லும் எல்லின்று (குறு. 890-1): எல்-எல்தல்-எல்லின்று 'எல்லே இலக்கம்' (தொல், சொல். 269): எல்-எல-எலக்கு-இலக்கு -இலக்கம் x 'ஒல்லென் ஒலி (சிலம்பு. 19-36). ஒல்-ஒலி 82 ஆ. சிங்காரவேலு முதலியார்; அபிதான சிந்தாமணி-பக், 978 9 |