பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒல்லென்லி நீர்’ (தொல். எழு. 482 உரை. மேற்.). ஒல்-ஒலி 'ஒள்ளொலி ஒள்-ஒளி 'விண் விணைத்தது' விண்-வினை-விணைத்தல் 'வெள் வெளுத்தது-(ஒளிக்குறிப்பு): வெள் -வெளு-வெளுத்தல் உரிப்பனுவல்களாகிய சொற்களஞ்சியங்கள் இவ்வேர்களாகிய ஒலி, ஒலித் குறிப்பானவற்றில் ஒரு முனை வேர்களைத் தொகுத்துச் சொல்வது போன்று, 'இம்மெனல் கல்லெனல் இழுமெனல் வல்லெனல் "கொம்மெனல் ஒல்லெனல் பொள்ளெனல் ஞெரேலெனல் கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லெனல் அம்மெனல் பிறவும் அனுகரண ஓசை' என்று பிங்கலமும் (2118), திவாகரம், இந்நூல் முதலியனவும் அடுக்கித் காட்டியுள்ளன. இவற்றுள், அம். இம், கொம், பொம்; ஒல், கல், வல், கொல், ஞொள், பொள் என்றெல்லாம் காட்டி இவை சொல்விளக்கும் ஒலிகள் (அனுகரண ஓசை) என்றன. மேலே கண்ட தமிழ் வட மொழித் தொடர்புகள் ஆறாலும் தமிழ் வட மொழிக்கு முன் தோன்றிய மொழி என்று உணரலாம். வடமொழி பிற Gត្វឆ្មា மொழிகளுக்கு முந்திய தோற்றமுடையது என்பதை அறிஞர்கள் கண்டறிவித்ததைக் கண்டோம். எனவே அதற்கு முந்திய தமிழின் தோற்றம் முதன்மை கொண்டது என்று கொள்ளத் தடை இல்லை. மேலும், தமிழுக்கு அமைந்த தகுதிப்பாடுகளும் அதன் முதன்மையை வைரமாக்குகின்றன; சுருக்கமாக அத்தகுதிப்பாடுகள் அறியத்தக்கன. அச் சுருக்கம் இது: உணர்ச்சியொலிகளாகிய இயல்பான ஒலியெழுத்துத் தோற்றம்; மூச்சொலி, கணைப்பொலி, உரப்பொலி இன்மை (தொல். சொல் 401 நச்சர்); - - சுழியாகவும் வளைவரியாகவும் அமைந்த வரிவடிவம்; உலகத் தொன்மை மொழிகளில் தமிழ் ஒலிப்பின் இழையோட்டம்; ழகரச் சிறப்பொலி; . - . 92