பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுட்டொலி, குறிப்பொலி, அசையொலித் தொடர்பான வேர்ச் சொல்லமைப்பு; உலக மொழிச்சொற்களுக்கு மூலவேர் கிடைக்கின்றமை; தொன்மைச் சிறப்பு மொழியான வடமொழிக்கு மூலவேர் கிடைக் கின்றமை; இடுகுறிச்சொற்கள் இன்மை; மொழிப்பொருட் கரணியச் சொற்களே கொண்டமை; பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் தொடர்ந்துள்ளமை; வளமார்ந்த வாழ்வியல் இலக்கியங்கள் கொண்டவை; குழப்பமற்றுச் சீரான இலக்கண நெறிகள்; தனித்தன்மையும் இனிமைப் பொருளும் உடைமை; பொருளதிகார-வாழ்வியல்-இலக்கணத்தைத் தனக்கெனக் கொண்டமை; முத்தமிழ்ப் பகுப்பும், அவற்றின் வழிக் கலைப்பெருக்கமும். குமரிக் கோட்டில் தோன்றிய முதல் மாந்த இனத்தின் மொழியாகப் பிறந்து கிளைத்துத் தழைத்து, பரவித் திகழும் இம்மொழி தன் தகவால் பெயர் சூட்டப்பெற்றுள்ள உலக முதன் மொழி தமிழ் இம்மொழி தோன்றிய காலத்தில் இதற்கென ஒரு பெயர் சூட்டப் பெற்றிருக்கும் என்று கூற இயலாது. 'மொழி பெயர் தேஎத்தர் (குறு. 11-7) என்றும், 'மொழி பெயா தேளத்த பன்மலை' (அகம். 31-15), 'மொழிபல பெருகிய தேஎம் (பட் 216) எனவும், மொழி பெயர்த்து அதற்பட யாத்தல்’ (தொல். பொருள். 4ே3) என்றும் குறிக்கப் பெற்ற மைக்கு ஏற்ப வந்தவர் மொழியை நோக்கித் தமக்கென உள்ள மொழிக் குப் பெயர் சூட்டினர் என்பதே இயல்பில் நிகழக் கூடியது. அதன்படி தம் மொழியின் தகுதிப்பாடு அறிந்து 'தமிழ் என்று பெயர் சூட்டினர் தொன்மைத் தமிழ்ச் சான்றோர். . - தமிழ் என்னும் மொழியின் சொல்லிற்குப் பல விளக்கங்கள் வந்துள்ளன. தம்-ழ் (தம்-இழ்-தமிழ்) தமக்கு உரித்தாக 'ழ்' கொண்டது என்பது பொருந்தச் சொல்வதாக உள்ளது. த்-அ-உயிர் முதல் எழுத்து; ம்-இ உயிர் அடுத்த இகரம்; ழ் (சிறப்பு மெய் எழுத்து-இவ்வகை எழுத்தமைப்பால் தமிழ் இவ்வாறு பொருத்துவது சற்று வலிந்து கொள்வதாகும். 93