பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதனிலையிலிருந்து தமிழ் என்னும் பெயர் எழுந்தது என்பது தக்க தாகும்' என்று குறித்துள்ளமையும் பாவாணர் கருத்தை உறுதிப் படுத்துகிறது. தனித்தகவுடையது என்னும் தன் பெயருக்கேற்ப, இனிமை, பொருட் செறிவு, மொழித் தகவுகள், செம்மை கொண்ட சீர்மை, கரை புரண்ட கால வெள்ளத்தில் மூழ்காமை, கரையான்களுக்கும் தப்பியமை. உலக அறிஞர்களால் போற்றப்படுகின்றமை முதலியவற்றால் திகழ்கின்றது 'மொழியில் தமிழ்'. இத் தகவுகளுக்குத் தன் பங்களிப்பை வழங்குவது 'தமிழில் எழுத்து’. 4. தமிழில் எழுத்து "எழுத்து' என்றால் எழுதப்படும் வரிவடிவ எழுத்தே நினைவில் வரும். எழுத்தாளன் எனப்படுபவன் கருத்துக்களை ஏட்டில் வரிவடிவில் எழுதித் தருபவனே, எழுத்து ஒலிகளை வாயால் சொல்லிக் கருத்துக்களை வழங்குபவன் பேச்சாளன். அவனை எழுத்தாளன் என்பதில்லை. இஃது எழுதப்படுதலின் எழுத்தே' என்னும் இலக்கண நூற்பாவால் நேர்ந்திருக்கும். ஆனால், வாயால் ஒலிக்கப்படுவதும் எழுத்து; கையால் எழுதப்படுவதும் எழுத்து; ஆம், ஒலி வடிவமும் எழுத்து; வரிவடிவமும் எழுத்து. செவியால் கேட்பதும் எழுத்து; கண்ணால் காண்பதும் எழுத்து. ஒலி வடிவம் எழுதருவதால் எழுத்து; வரிவடிவம் எழுதப்படுவதால் எழுத்து - இரண்டினுக்கும் எழு என்பதே முதனிலை.

தொல்காப்பியம்,

  • *

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளப்பின் சொல்லிய பள்ளி எழுதரு வளியின் (தொல். எழு, 102-1, 2) என்று ஒலிவடிவை எழுதருவதால் எழுத்து என்று குறிக்கிறது. இவ்வொலி வடிவின் பிறப்பைக் கூர்ந்து கண்டு, ஒன்று, ஒலி தோன்றும் களம் - நிலை, இரண்டு. ஒலியை உந்தும் காற்று - ஆவளி, 85 (35. w. @5m 65ı @if: Birl_n fi: Greek Words of Tamil Origin--gpçät éyyéng 95