பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொன்மை மொழிகளுள்ளும் எழுத்துருவிலும் தமிழ் எழுத்துக்கள்தாம் முதன்மைத் தொன்மை உடையவை. தமிழ் எழுத்தைப் பார்த்தே தொன்மை வாய்ந்த வடமொழியும் தன் எழுத்துருவத்தை ஆக்கிக்கொண்டது. எட்வர்டு தாமசு என்பார் 'வட நாட்டில் ஆதியில் தமிழ் மொழியே வழங்கிற்று. அதனின்றே வடமொழி எமுத்துக்கள் தோன்றின’ என்று எழுதியதில் நூற்றுக்குநூறு உண்மை உண்டு. இதனை மிகவிளக்கமாக வடமொழியறிஞர் இராகுல சாங்கிருத்தியாயன் நிறுவியுள்ளார். மேல் நாட்டு மொழியறிஞர் சிலர் தமிழ் எழுத்திற்குப் 'பிராமி எழுத்து மூலம் என்றும், பினிசிய எழுத்தைப் பார்த்தே தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப் பெற்றன என்றும் எழுதினர். பிராமி எழுத்து பாணினி காலத்தில் உருப்பெற்று அசோகர் காலத்தில் மிகைப்படுத்தப் பெற்றது. தொல்காப்பியர் பாணினிக்கு முற்பட்டவர் என்பது முடிந்த முடிபு. எனவே பிராமிக்கு முந்தியது தமிழ் எழுத்து பினிசிய மொழி வல மிருந்து இடமாக எழுதப்பெறுவது. தமிழோ இடமிருந்து வலமாக எழுதப் பெறுவது. இம்முரண்பாட்டைக் காட்டி மொழியறிஞர் வை. சதாசிவப் பண்டாரத்தார் மறுத்தார். இம்மறுப்பு மாற்றாரால் மீற முடியாதது. எவ்வகையில் நோக்கினாலும் தமிழ் பிறமொழிச் சார்பில் தோன்றிய தன்று. தமிழ் தனி மூல மொழி. உலகில் முதன் முதலில் தோன்றியவன் தமிழ் மாந்தன் என்பது முன்னே நிறுவப்பட்டது. அம்மூல மாந்தனால்தமிழனால் பையப் பைய, ஆனால் செம்மையாக உருவாக்கப்பட்டவை தமிழ் எழுத்துக்கள். இவ்வடிவ எழுத்தமைப்பு இயற்கைப் பாங்கு கொண்டது என்பதும் இங்கு நிறுவப்படும். c இவ்வெழுத்து வடிவம் வரிவடிவம்' எனப்பெறுகின்றது. வரி' என்றால் வளைவு, கோடு என்பன பொருள்கள். வளைவுக்கோடுகளாக வரிக்கப் பெற்றவை தமிழ் எழுத்துக்கள். இவ்வாறு வரிப்பதால் 'வரிதல்' என்னும் சொல் எழுத்தைக் குறிப்பதாயிற்று. அஃ வரை என்றாகி 'வரைதல் என்னும் பெயரையும் பெற்றது. மணலையோ, மரப்பட்டையையோ, ஒலையையோ இலையையோ எழுது கருவியாக விரலோ, பிறகருவிகளோ தீண்டி உருவாக்குவ தால் திட்டல்' எனப்பெற்றது. எழுதப்படும் களத்தில் தொடர் புள்ளிகளைப் 00