பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு பல காரணங்களாலும் இரேகை (மெல்லிய மயிரிழைக் கோடு) 'கணக்கு (கண்ணுக்குப் புலனாவது) எனப்பட்டது. எழுதப்படும் தொழிலை "எழுதுகை, வரியாடல்' எனவும் வழங்கினர். எழுதப்படும் களமாக மரங்கள் உரித்தெடுக்கப்பட்ட மரப்பட்டைகள் இலைகள், மணல், ஒலைகள் பயன்படுத்தப்பட்ட ன. எழுதப் பயன்படுத்தப்பட்ட கருவி எழுதுபடை எழுத்தூசி, எழுத்தாணி தூரிகை, துகிலிகை எனப்பட்டது. எழுதுகோல் எனவும் வழங்கப்பட்டது. ' எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் ” (குறள் 1285) என்று திருவள்ளுவர் பாடின்ார். எழுதுகிறவன் எழுத்தாளன் எனப்பட்டான். இக் காலம் வழங்கப்படும் பொருளில் முன்னர் எழுத்தாளன்’ வழங்கப்பெறவில்லை. அரசு அலுவலரில் பன்ட வீரரின் எண் ணிக்கை அவர் பெறும் ஊதியம் போரிடும் வலிமை இழந்தவர் வேற்றிடம சென்றவர் முதலிய விவரங்கள்ைக் கண்க்கிட்டுக் குறிப்பவ்னே முன்னர் எழுத்தாளன் எனப்பட்டான். இப்பணியாற்றிய எழுத்தாளன் ஒருவன் தமிழில் புலமை பெற்றவன். அவன் பெயர் சேந்தம்பூதன்ர்ர். மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் எனப் பெயர் பெற்றான். குறுந்தொகையில் இரண்டு (90, 226) பாடல்களைப் பாடினான். இவ்வாறெல்லாம் எழுத்துப் பெயரில் சொற்கள் உருவாயின. இவ்வாறாக்கிய தமிழ் எழுத்தின் தேர்ற்றம் எத்தண்கயது? அது இயற்கைப் பாங்கு கொண்டது என்று குறிக்கப்பட்டது. - -- 5. எழுத்தில் சொல் வேரும் வேர் அடியும் எழுத்தும் எழுத்துக் கூட்டல்களுமே சொல் என்பதை அறிவோம். அத் துடன் பொருள் தருவதுதான் சொல் என்பதும் புரிந்ததே. முதலில் நெட் டொலிகள் தோன்றி ஒவ்வொரு நெட்டொலியும் ஒவ்வொரு உணர்வுக் குறிப்பை அறிவித்தமை காணப்பட்டது. அவ்வாறிே ஒவ்வொரு நெட்டொலி யும் ஒவ்வொரு நெட்டெழுத்தாகி ஒவ்வொரு பொருள்ை உண்ர்த்திற்று. }{}}