பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே " என்கிறது தொல்காப்பியம். திணை என்றால் ஒழுக்கம். உயர்வாகக் குறிக்கப் படும் ஒழுக்கங்களைக் கொண்ட மாந்தர் உயர்திணையினர். உயர் அல்லாத திணை அல் திணை. அஃதாவது உயர்வு அல்லாத திணை அஃறிணை எனப் பட்டது. இவ்வாறு வருதல் தமிழின் இயல்புகளில் ஒன்று. ஒழுக்கங்களைக் குறிக்கும் சொல் இவற்றோடு நிற்பதில்லை. ஆனாலும் இவை உலக அளவில் எல்லாத் துறையிலும் பொருந்தும். மாந்தன் உயர்திணை. இன்று வரையும் உயிரோடு இயங்கும் மாந்தன்தான் உயர்திணை. உயர்ந்த ஒழுக்கங்களைக் கொண்டவன் அவன். அல்லாத ஒழுக்கங்களைக்கொண்ட திணை அஃறிணை. அறிவியலும் வேறு பல துறைகளும் வளர்ந்துள்ள இக்காலத்திலும் உயர்தினை மாந்தன்தான். மாந்தனைப்போல் இயங்குகின்ற அறிவியல் உருவாக்கிய பொருள்கள் பல உலவுகின்றன. செவ்வாய்க் கோளில் மாந்தன் இறங்க முயற்சி செய்கிறான். நிலவில் இறங்கி நடந்த அவன் மாந்தன்தான். ஆனால் அறிவியலும் அணுமின்னியலும் வளர்ந்துள்ள இக்காலத்தில் நிலவில் செவ்வாய்க் கோளில் மாந்தன் இயங்கிச் செய்கின்ற செயல்களை அவனைப் போன்ற உருவமுடையவையும் வேறு சிலவும் செய்கின்றன. மாந்தன்போல் உருவம் அமைக்கப்பட்ட பொறிகள் இரும்பு, ஈயம், செம்பு, பித்தளை, வெள்ளி தங்கம், வைரம் இவைகளாலும் இவை கூட்டியும் உருவமைக்கப்படுகின்றன. நிலத்திலிருந்து இயக்கும் கணிப்பொறி அவற்றை இயங்க வைக்கிறது. இதன் முன்னேற்றமாக இப்போது அவையே தன்னமைப்பில் இயங்குமாறு செய்து அவற்றின் செயல்களை நிலத்திலுள்ள கணிப்பொறி பதிந்து காட்டி விடுகிறது. இவ்வாறு உருவாக்கப்படுவதோடு தோலாலும், மரத்திலிருந்து வடியும் பாலாகிய இரப்பராலும் சில கலப்புப் பொருள்களாலும் உருவாக்கப்படுகின்றன. இவற்றிலும் ஆழமாக மாந்தன் உடலில் அமைந்த தசை, எலும்பு, ஊன் இவற்றைப் போன்ற அமைப்பிலும், இவைதான் என்று சொல்லும் நிலையிலும் மாந்தன் உரு அமைந்தவை இயக்கப்படுகின்றன. ஆனாலும் இவை மாந்தர் எனப்படுவதில்லை. மாந்தனுக்குத் தனிச்சிறப்பாக உள்ள ஆறாவது அறிவாம் பகுத்தறியும் அறிவும் இந்தச் செயற்கை மாந்த உருவத்திற்கு உண்டு. முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவில் திரும்பக் கொணரும் நினைவாற்றலும் உண்டு. ஆனாலும் மாந்தனில்லை. ஆங்கிலத்தில் ரோபோ என்றுதான் பெயர் வைத்தனரேயல்லாமல மேன்' என மாந்தர் பெயர் வைக்கவில்லை. சிந்தனைகூட இந்த ரோபோவிற்கு உண்டு என்பர். ஆனால் மாந்தனுக்கு உரிய தன்னுணர்வு மட்டும் ரோபோவிற்கு இல்லை. ரோபோ போன்று இயங் 103