பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது பெய்கின்ற கார் காலம் வெளிப்படுகின்றது. விண்ணிலிருந்து வரும் பல உறுப்புகளில் இஃதும் ஒன்று என்ற சினை வெளிப்படுகின்றது குளிர்ச்சியுடையது எனும் தன்மை, அஃதாவது குணம் வெளிப்படுகின்றது. பெயல் என்ற தொழில் வெளிப்படுகின்றது. இவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தால் பெயர், இடம், காலம், தினை குணம், தொழில் என்னும் ஆறைக் காணலாம். இதுபோன்றுதான் வெளிப் படுவதாகிய, பெய்தலாகிய பெயர் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறு பெயர் களாக வகுக்கப்பட்டது. இந்த ஆறு மட்டும் பெயரின் தனித்தன்மை. இவ் வாறும் பிறவற்றிற்கு ஒருங்கிணைந்து அமைவதில்லை. இதனாலும் பெயர் தனிச்சிறப்புடையது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தால் சொல்லிலும் பெயர் தனியிடம் பெறுகின்றது. அதனால்தான் சொல் எனப்படுவது பெயரே என்றார். பெயர் இவ்வாறு தமிழில் மட்டுமன்றி தமிழடியாகவும் தமிழைச் சான்றாகவும், தமிழை எடுத்துக்காட்டாகவும் கொண்ட மொழிகள் பல பெயரைத் தனிச்சிறப்புடன் கொள்கின்றன. உலகில் தொன்மை மொழிகளாகக் கருதப் படும் எ பிரேயம், கிரேக்கம், இலத்தீன், சீனம் முதலிய மொழிகள் பெயரையே சிறப்பாகக் கொள்கின்றன. இவை கொண்டும் பெயருக்கு உலகிலேயே தனித் தன்மை உண்டு என்று நிறைவாகக் கொள்ளலாம். 7. பெயரில் உரி பெயரிலிருந்துதான் உரிச்சொல் தோன்றியது. வினையிலிருந்தும் உரிச்சொல் தோன்றும். எனவே உரிச்சொல் என்பதற்கு உரிய சொல் உரிமை யுடைய சொல் என்பன பொருள்கள் என்றாலும் பெயருக்கும் வினைக்கும் உரியது என்பதும் உண்டு. ஆராய்வுரையின் தொடக்கப்பகுதியில் இவ்வுரிச் சொல் விளக்கப்பட்டது. உரிச்சொல்லுக்குரிய தனித்தன்மை, ' பலபொருள் ஒருசொல்லும் 2 3 ஒருபொருள் பல சொல்லும் என்பனவாகும். 107