பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s “ சால உறுதவ நனிகூர் கழி மிகல் என்னும் நூற்பா, சால தொடங்கி கழி வரை ஆறு சொற்களுக்கும் மிகுதி என்னும் ஒரு பொருளைக் குறித்தது. இவ்வாறே ஒரு சொல்லும் , பொருளைத் தரும். இஃது உரிச்சொல்லின் தனித்தன்மை, தனிச்சிறப்பு, தனி அமைப்பு என்றும் சொல்லலாம். உரிச்சொல் பெயருக்கும், வினைக்கும் இடைக்கும் உரிமையுடையது மட்டுமன்றிச் செய்யுளுக்கு அதிக உரிமை கொண்டது. இக்காலத்தில் உரைநடை யிலும் அவ்வுரிமை உள்ளது. உரு என்பது 'உல்' என்னும் வேரடிச் சொல்லிலிருந்து தோன்றியது. எள் என்பது எச், ஏர் என்றெல்லாம் விரியும். எல் என்பதன் மூலப்பொருள் ஒளி என்பது தும், அதனால்தான் ஒளியைத் தருகின்ற சூரியன் எல் என்ற சொல்லாலும் குறிக்கப்பட்டது. தொடர்ந்து எல்லை என்ற சொல்லும் உருவாகியது. எல் σ7 glub சூரியன்தான் பகற்பொழுது தோன்றுவதற்கும் மறைவதற்கும் எல்லை. யாக உள்ளது. உயர்திணை அல்லாத திணை அஃறிணை எனப்பட்டது போல எல் என்பதும் ஓர் அமைப்புக்குக் காரணம் ஆயிற்று. சூரியன் தோன்றிப் பகலை உருவாக்குவதால் பகற்பொழுதுக்கும் எல் என்றொரு சொல் உண்டு. பகற்பொழுதைக் குறிக்கும் எல் அல்லாதது அஃதாவது இரவு அல் எனும் சொல்லையும் கொண்டது. அல்லும் பகலும் என்று கூட வழங்குகிறோம். இலக்கியங்கள் எல்லும் அல்லும் என்று குறிக்கும். எல் அல்லாதது அல் இது போன்றே பல பொருள்களுக்கும், பல சொற்களுக்கும் உரிமை கொண்ட உரிச்சொல் வேறுபட்ட மாறுபட்ட பொருள்களையும் குறிக்கவரும். இவற்றி லும் பெயரில்தான் இத்தன்மைகள் அதிகம் உண்டு. இதனால் பெயருக்கு உரிச் சொல் அதிக உரிமை உடையதாகின்றது. உரிச்சொல்லில் பெயர், வினை இடை என்ற மூன்றும் உண்டு. உரிச்சொல்லைக் குறிக்கும் இலக்கண நூல்களில் இந்நூலைப் போல உரிப்பனுவல்கள் உரிச்சொல்லின் விள்க்கங்களைத் தரு கின்றன. 8. உரியில் பனுவல் உரிச்சொற்கள் எல்லாம் ஒரு பொருள் பல சொல்லாயும் பல பொருள் ஒரு சொல்லாயும் அமைவது. இதனால் சொல் பெருக்கம்தான் நிறையும் அதற்கு உரைநடையில் பட்டியலாகத் தருவது எடுத்துப் புரட்டிப் பார்த்துச் கொள்வதற்குப் பயனாகும். ஆனால் முற்கா லப் புலவோர் அனைத்தையும் மனப்பாடமாகக் கொள்ளும் முறைகொண்டோர். அதற்குச் செய்யுளே உகந்தது. அதனால் முற்கால நூல்கள் செய்யுளில் செய்யப்பட்ட4ை ಡಿ.7೧ುತಿು உரிப்பனுவல்களும் செய்யுளால் ஆயின. பனுவல் என்றால்