பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டலவர் படைத்த இந்த உரிப்பனுவலும் தன்மையால் .ெ பெற்றது. தன்மை என்றால் எதன் தன்மை? மணியின் தன்மை. மணியின் தன்மை என்ன? திரட்சியும் ஒளியுமான தன்மை கொண்டது ഥങ്ങി. മൂ நூலும் பெயர்களால் தொகுக்கப்பெற்ற திரட்சி கொண்டது; பொருளாலும் அமைப்பாலும் விளக்கந்தரும் ஒளி கொண்டது. இவ்வாறு மணியின் தன்மை யால் பெயர் பெற்றது. மணி என்றால் எந்த மணி மணி ஒன்பது வருை படும். அவை: மாணிக்கம், நீலம், வைரம், வைடுரியம், கோமேதகம் மரகதம் புட்பராகம், முத்து. பவளம் எனப்படும். இவை ஒன்பதும் மணிகளே. ஆயினும், இவற்றுள் இரண்டு மட்டும் சிறப்பாக மணிப்பெயருடன் கூறப்படும். அவை மாணிக்கமும் நீலமும், நீலமணி, நிலமாமணி என்று நிலம் குறிக்கப் படும். 'நீலமணி மிடற்று ஒருவன்' என்றார் அவ்வையார். 'நீல மணிப்பெயர் மணி என நிகழ்த்தும்' என்று பிங்கலரும், 'மணியெனும் பேர் நீலமாமணியின் பேரே' என்று மண்டலவரும் பெயர் குறித்தனர். மணி என்பதே நீலத்தின் பெயர் என்றனர். நீல நிறக் கண்ணன் மணிவண்ணன் எனப்பெற்றான். மற்றொரு மணியாகிய மாணிக்கமோ 'மாணிக்கமணி' எனப்படுவ தில்லை. மணி என்றாலே மாணிக்கந்தான். சங்க இலக்கியங்களில் மாணிக்கம் என்னும் சொல் இல்லை. 'வடமலைப் பிறந்த மணியும்' என்ற உருத்திரங்கண்ணனார் தொடருக்கு நச்சினார்க்கினியர், மேருவிலே பிறந்த மாணிக்கம்' என்றும் - 'பாம்பு மணி உமிழ' என்ற கபிலர் தொடருக்கு 'டாம்பு மாணிக்கத்தை ஈன' என்றும் விளக்கம் தந்தார். சிவந்த உதட்டிற்கு உவமை கூற வந்த மருதன் இளநாகனார் 'மணி புரை செவ்வாய்' என்றார். - சங்க இலக்கியங்களில் எங்கும் இவ்வாறாக, சிலம்பிலிருந்து மாணிக்கம் தெரித்து விழும் சிலப்பதிகாரத்திலும் "மாணிக்கம்' என்ற கொல் இல்லை. 'எண்காற் பெ. - பேசவைத்த இளங்கே னியுடை -- அரியே' என்று கண்ணகியை