பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" தோளா மணி குவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்துச் சூளா மணியாய்ச் சுடர இருந்தானை - என்று சீவகனைப் பெருமைப்படுத்தினார். நச்சர் இச் சூளாமணியை நாயக மணியாய் விளங்க இருந்தானை' என்றார். இவ்வகையில் சூளாமணி எதிர் மறைப் பொருளாலும் தகுதியுடையதாகின்றது. மாணிக்க மணி கோக்கப் படுவதைவிடப் பதிக்கப்படுவதே சிறப்பு. இவ்வாறு எதிர்மறைப் பொருளன்றி உடன்பாட்டுப் பொருளும் சூளாமணிக்கு உரியது. சூள் என்பதற்கு உயர்ந்த இடம், உச்சி எனப் பொருள். சூளி உச்சியை உடையது; சூளை உச்சியில் முடியில் அணியும் அணி குளிகை உச்சியை உயரத்தை உடைய குன்று. செய்குன்றையும் குன்று போன்று உயர்ந்த கோபுரம் கொண்ட வளமனையையும் குறிக்கும். 'கோபிர மன்றம் சூளிகை’ என்றார் கச்சியப்பர். தலையில் அணியப் பெறும் அணிவகை ஒன்றினையும் சூளிகை குறிக்கும் என்பதை, 'சூளிகையும் சூட்டும்' என்னும் சேரமான்பெரும்ாள் கூற்றால் அறிய ஆ. ச்சியில் தலையில் அணியப்பெறும் சூளிமணி சூளிகைமணி சூளாமணி ளகரம் சொல்லில் ழகரமாக ஆதல் வழக்கு இவ்வழக்கில் சூள் சூழ் бvт ф. ஆயிற்று. ஆகித் தலையணியைக் குறிக்கும். 'மென் பூச் சூழும் (சூழ் உம்) எழுதி என்றார் மணிவாசகர். சூழியானை யின் முகபடாம். முகபடாம் அணிந்த யானை 'சூரியானை' எனப்பெறும். 'சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன் என்பர் மாமூலனார். மண்டலவரும் இந்நூலில் சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் என்றார். 'நெடுமதிற் சூழி என்னும் ஐயனாரிதனார் ஆட்சியில் மதிலின் உச்சி சூழி எனப்பெற்றது. இவ்வளர்ச்சியில் சூளிமணி, சூழிமணி என்றும், சூளாமணி சூழாமணி என்றும் சொல்லமைப்பு கொண்டது. சூழாமணி என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். - 121 g5-a-16