பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * s & ol. 5. 楚 - t தொடக்கத்தில் அமைந்தவை. இடையில் அமைந்து நான்மணிக்கடி,ை இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமா, நவமணிமாலை, பன்மணிமாலை என மாலை நூல்கள் பெயர்பெற்றன. உரிச்சொல், புனுவல் நூல்களும் 'அபிதான மணிமாலை 'நவமணி, காரிகை நிகண்டு' என இடைமணிப் பெயர் பெற்றுள்ளன. அடைமொழி பெற்ற மணிப்பெயரில் முதலில் சிந்தாமணிதான் நூற் பெயராயிற்று. திருத்தக்கதேவர்தாம் முதலில் சிந்தாமணிச் சொல்லைத்தமிழில் அறிமுகம் செய்தவர். இச்சொல் அவர் படைப்பன்று. அவர் ஆக்கிய சீவக சிந்தாமணிக் காப்பியத்திற்கு நான்கு வடமொழி நூல்களை முலமாகக் கொண்டார். அவற்றுள் ஒன்று கத்திய சிந்தாமணி என்பது. இதில் உள்ள சிந்தாமணியையே தம் நூலுக்குக் கொண்டார். தொடர்ந்து நிகண்டு நூலிலும் சிந்தாமணி பெயருடன் சிந்தாமணி நிகண்டு (கி. பி. 1874) என் றொன்று உருவானது. இதை எழுதியவர் யாழ்ப்பாணத்து வைத்தியலிங்கம் பிள்ளை. சூடாமணிப் பெயரில் வேதகிரிபார் சூடாமணி என்றொன்று உண்டு. இந்நூல் அறுநூறு செய்யுள்களைக் கொண்டது. பத்தொன்பதாம் நூற் றாண்டில் பல்பொருட் சூடாமணி என்றொரு நூல் உருவாயிற்று. சூடாமணிப் பெயரில் மதங்க சூளாமணி என்றொரு இசைநூல் உண்டு. வேறு சிறுசிறு நூல்களும் எழுந்துள்ளன. எத்தனை சூடாமணிப் பெயர்க ளிருப்பினும் இச்சூடாமணி நிகண்டுதான் பயில்வோருக்கு அறிமுகமாகவும் சிறப்புடையதாகவும் அமைகின்றது. இனி இத்தகைய சிறப்புடைய நூலை எழுதிய ஆசிரியர் அறிந்து கொள்ளத் தக்கவர். 70. மணியின் மண்டலவர் சூடாமணி நூலின் ஆசிரியர் மண்டலவர் எனப்படுவார். இப்பெயர் அவருக்கு ஏன் அமைந்தது என்பது கருதத்தக்கது. நாட்டுப் பிரிவில் இக் காலத்தும் வட்டம், மாவட்டம், மண்டலம் என்று விரிந்து அமைவதைக் காண்கின்றோம். அவ்வாறு ஒரு மண்டலத்துக்குத் தலைவராக இருந்து. இப் பெயர் பெற்றார் என்று எழுத முடியவில்லை. இந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் தன்னைக் குறிப்பிடும் இவர் 'மண்டலவனே' என்கின்றார். தன்னடக்கமாக அன் விகுதியிட்டுக் *அப்பட்டிருக்கலாம். ஆனால் இந்நூலின் முதற்பதிப்பில் மண்டலப்புருடர் எழுதிய சூடாமணி நிகண்டு என்றுள்ளது. மண்டிலவர் 直魏