பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சூடாமணியென ஒன்று சொல்வன் என்றுதான் எழுதினாரேயன்றி சூடாமணி நிகண்டு என்று பெயரைக் குறிக்கவில்லை. ஆனால் சூடாமணி நிகண்டு என்றே பதிப்புகளில் உள்ளது. - இவர் ஏன் மண்டலப்புருடர் எனக் குறிக்கப்பட்டார்? அருகபதம் பெற்றோரில் ஒரு சாரார் மண்டலவர் எனக் குறிக்கப்பட்டனர். அவ்வாறு அருகபதம் பெற்ற தகுதியில் இவர் பெயரை மண்டலவர் எனக் குறிப்பிட இயல வில்லை. அருகபதம் பெறுவதென்றால் துறவியாக இருந்து உரிய டக்குவங் களில் வளர்ந்து அப்பெயரைப் பெற வேண்டும். சமணத்துறவிகள் அடிகள் என்றே குறிப்பிடப்பெறுவர். இவர் அவ்வாறு குறிப்பிடப்படாமல் புருடன் என்ற சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளார். புருடன் என்பது புருசன் என்னும் சொல்லின் திரிபாகும். புருசோத்தமனை புருடோத்தமன் என்றும் வழங்குகிறோம். வழக்கில் புருசன் என்பது கணவன் என்ற பொருளில் வருகிறது. அச்சொல்லுக்குப் பொருளோ ஆண் மகன் என்பதுதான். ஆனால் அப்பொருளை மனத்துட்கொண்டு எதிரில் போவோர் வருவோரை, “அதோ ஒரு புருசன் போகிறான், இதோ ஒரு புருசன் போகிறான்' என்று சொல்ல முடியாது. மண்டலவர் சமணத் துறவியாக இருந்தால் அவரை புருடன் என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. புருடன் என்று குறித்தமை கொண்டு அவர் துறவியல்லாமல் சிறந்த சான்றோனாக வாழ்ந்துள்ளார் என்று தான் கொள்ளவேண்டும். - இவர் இந்நூலைத் தேர்ந்து, கண்டு, உருவாக்கியுள்ளார். இவர் தம் சிறப்புப் பாயிரத்தில் இவர் நூலுக்கு முதல் நூலாக அருகக் கடவுளே எழுதிய தாகவும் கணதரர் என்பவர் வழிநூல் எழுதியதாகவும் குறித்துள்ளார். இவரைப் பாதுகாத்துப் போற்றி வளர்த்தவர் குணபத்திரர் என்ற வள்ளல். ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் இக்குணபத்திரரைப் போற்றி வணங்குகின்றார். அதே போன்று ஒவ்வொரு தொகுதியின் ஈற்றுப் பாடலி லும் போற்றுகின்றார். ஒவ்வொரு தொகுதியிலுள்ள பாடல்களின் கூட்டு எண்களையும் குறிக்கின்றார். இவற்றால் இவரது நல்லியல்புகளையும் மரபு வழுவாமையையும் உணரலாம். - இந்நூல் அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் ஆதியது. பிற நிகண்டுகளை நோக்க எளிமை கொண்டது. ஆற்றொழுக்கான அகவலோசை கொண்டது; செய்யுள்களைக் கொண்டது. இந்நூலில் ஒவ்வொரு உட்பிரிவும் அருக வாழ்த்தைக்கொண்டு அமைந் துள்ளது, இதனை விடாக் கொள்கையாக இவர் கையாண்டுள்ளார். இவர் 125