பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளது. அது பிறவற்றைவிட தமிழுக்குச் செய்த திங்குகள் மிக அதி, வடமொழிப் புராணக் கதைகள் பல தமிழ் நூல்களாயின. அவற்றால் பழந் தமிழ் நூல்களும் வடமொழி வழிவந்தவை என்று முன்னரும் கூ மப்பட்டது. இன்றோ, வடமொழிக் கலப்பால் தமிழ்ச் சொற்கள் பல அழிந்துள்ளன, . திரிந்துள்ளன. பல சிதைந்துள்ளன. மிகத் தொன்மையும் ஆழமும் கொண்ட தமிழ் தன் தன்மையிழந்து இன்று தலை குனியுமளவிற்குத் தாழ்ந்துள்ளது. முன்னர்க் குறித்தது போல் ஆங்கிலக் கலப்பும் இதற்குக் காணிபமாகும். வடமொழித் தாக்கம் தமிழ்மொழியை மட்டுமன்றி தமிழ் மாந்தரது வாழ்வியலிலும் புகுந்தது. இன்றும் தமிழரின் இல்ல விழாக்கள் பல மங்கல விழாக்களும் அவல விழாக்களுமாக வடமொழியிலேயே செய்யப்படுகின்றன. கோயில்களில் வடமொழியே தனிச்சிறப்பு பெற்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்ற கோட்பாட்டை அறிவித்துப் பரப்பினார். அவர் சைவத் திருமடத்துக் கோயில்களில் தமிழ் வழிபாடே கைக்கொள்ளப்பட்டது. பண்பாட்டு மரபுகளிலும் வடமொழிக்குத் தனி இடம் தரப்பட்டது. எத்துணையோ தமிழ் மரபுகள் காலூன்றி நிற்கஇயலாமல் கலங்கிச் சிதைந்தன. தமிழகத்திற்கும் தமிழ் மாந்தர்க்கும் இவற்றிற்கு விடிவுகாலம் என்று கொள்ளு தற்கு ஒரு சிறு குறியும் தோன்றவில்லை. வடமொழி மறைகளுக்குத் தரும் சிறப்பைத் தமிழ் நூல்களுக்கோ படைப்புகளுக்கோ தருவதில்லை. இவற்றை யெல்லாம் மீறித் திருக்குறள் ஒன்றுதான் பழந்தமிழ்க் கோட்பாட்டை பறை சாற்றி நிற்கின்றது. மக்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்படுகின்றது. வடமொழித் தாக்கத்தை வென்று அதன் அமுக்கத்திலிருந்து மீண்டு அந்நூல் தான் தமிழரை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றது. உலகத்தாராலும் கொள்ளப்படுகின்றது. - காலங்கள் மாறினும் புதுக்கோலங்கள் புகினும் திருக்குறள் -ನಕTDI யைச் சாற்றுகின்ற காரணத்தால் அது உலகில் ஒளிவிட்டுத் திகழ்கின்றது. உண்மை என்றும் மறைவதில்லை; கெடுவதில்லை. இது நிலைத்த ஓர் கருத்தாகிவிட்டது. -- ஆயினும் இனிமேலும் இந்நிலை அறிஞர்களால் கவனத்தில் கொள்ளாது LTಣನು தமிழ்ப் பண்பாடு மட்டுமன்றி தமிழர் வாழ்வியலும் சீர்கெட்டுப் போகும். இந்திய நாட்டளவில் எடுத்துக்கொண்டால் வந்த வடவரையும் ஆங்கிலரையும் அவர்தம் மொழிகளையும் ஏன் கோட்பாடுகளையும் வே. . தாம் கொள்வதிலே பெருமைகொள்கின்றனர் . தமிழர். தமிழ் நாட்டைப் போல