பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் வேரடிச் சொல்லிலிருந்து எத்துணைச் சொற்கள் பெருகும் என்று எல்லையிட முடியாது. இலக்கியப் படைப்பு, சிறந்த சொற்பொழிவு இலக்கண அமைப்பு, கவிதைகள், பாடல்கள் எனப் பல்வழியிலும் தமிழ்ச் சொல் பொலிவதால் அம்மொழி மட்டுமன்றி அதனைப் பயிலும் வேற்றின, தாரும் வேற்று நாட்டாரும் பயனடைவர்; பொலிவடைவர். இதனை வெளி நாட்டு அறிஞர் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். வடமொழியிலும் இராகுல சாங்கிருத்தியாயன் போன்றோர் தமிழ்ச் சொல்லின் பொலிவை எடுத்துக் காட்டியுள்ளனர். அவர்தான் வடபுலத்தில் தமிழ் பரவியிருந்ததையும் 'தமிழக்' என்றொரு நகர்ப்பகுதி இருந்ததையும் குறித்துள்ளார். இன்றும் வட புலத்தில் குடியேறியோர் பலர் தம் முன்னோர் அடையாளம் தெரியாமல் மாறிப் போயுள்ளனர். வடபுலத்து மொழிகள் சிலவற்றுள்ளும் தமிழ் திரித்து வழங்கப்படுவதை மொழியறிஞர்கள் குறித்துள்ளனர். தமிழ் மொழியின் ஆழமும் அகலமும் கண்டோருள் இலங்கையர், அவருள்ளும் யாழ்ப்பாணத்தார் குறிக்கத்தக்கவர்கள். யாழ்ப்பாணம் என்ற சொல்லமைப்பே தமிழ் நாட்டின் தனிச்சிறப்புடைய இசைக்கருவியாகிய யாழையும் அதனை மீட்டிய பாணரையும் சொல்லிக்கொண்டுள்ளது. தமிழுக்கு நூல்களை வழங்கிய பங்கும் அவர் களுக்கு உண்டு. இன்றும் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் மொழியுணர் வில் தமிழகத்தாரினும் மேம்பட்டவர். மொழிநூல் இலக்கியத்தில் ஆழமாகவே புகுந்தவர். ஒரு மொழி தன் சொல்லால் தன் வளத்தைக் காட்டமுடியும். தமிழ்ச் சொல் வழக்குகள் பழம்பெரும் மரபுகளை நினைவுபடுத்துகின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்துப் பதிப்பாகிய பல்கலைக் கழகப் பேரகராதி தமிழ்ச் சொற்க ளின் பொலிவைத் திறம்பட எடுத்து வைக்கின்றது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் தமிழில் பாடநூல்களை உருவாக்கத் தொடங்கியது. அவற் றில் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோள் நோக்கமாயிற்று. திங்களுக்கொரு கூட்டம் கூடி ஒரு துறைப் பேராசிரியர் பலரும் தமிழறிஞர் மூவரும் அதில் இடம் பெற்று தமிழ்ச் சொற்களை உருவாக் கினர். அதற்கு முன்னோட்ட மாக அத்துறைப் பாட நூல்களில் வரும் ஆங்கில் வடமொழிச் சொற்களின் பட்டியலை அதில் பங்குபெறுவோருக்கு அனுப்பி அவரவர் முன்கூட்டியே சொற்களைக் கண்டுவர வாய்ப்பு தரப்பட்டது. 5.Gడిమrfaు பலர் தமிழார்வத்தின்ர். புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக வேண்டும் என்ற ஆர்வமுள்ளோர் பலர் இருந்தனர். அதனால் பல தமிழ்ச் சொற்கள் பொலிவுள்ளவைகளாக எழுந்தன. பல் துறைக்ளில் உருவாக்கப் பட்ட சொற்களின் தொகுப்பை ஒரு நூலாகப் பதிப்பிப்பது என்று முடிவெடுக்க்ப் பட்டது. அஃது எந்த அளவு செயல்பட்டிருக்கிறதோ அறியேன். அவ்வாறு 1競爭