பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓர் தொகுப்பு வெளிவந்தால் பொலியும் பல தமிழ்ச் சொற்களைக் கண்டு மகிழலாம். இக்காலத் தமிழ் இதழ்கள் சிறந்த சொற்களைக் கையாளுகின்றன என்று கூற இயலாது. அவ்வந் நேரத்திற்கேற்ப, அவரவர் ஆர்வத்திற்கேற்ப செய்தி களைத் தருவது, கருத்துக்களைச் சொல்வது, விளக்கங்களை வழங்குவது என்ற கடைப்பிடிகளே உள்ளன. மொழி பற்றிய நினைப்பும் இல்லையென்றால் மொழி ஆக்கம் பற்றி என்ன சொல்வது? தமிழ் இனிமை என்ற பொருளுடையது என்பர். கழாரம்பர்' என்னும் பழம்பெரும் ஆசிரியர் தம் பேரிசையில் 'தமிழ் சிவம் இனிமை என்னும் தனிப் பொருளதாம் என்று இனிமைப் பொருள் காட்டி எழுதினர். பலரும் அதனைப் பின்பற்றினர். பாவேந்தர் பாரதிதாசனார், “ இனிமைத் தமிழ்மொழி எமது எமக்குநல் இன்பந் தரும்படி வாய்த்த நல்லமுது ” என்று பாடி, தமிழின் சுவையைக் கணிபைப் பிழிந்திதிட்ட சாறு என்றும் பாடினார். இனிமைச் சொற்கள் பலவற்றை இந் நூலும் அறிவிக்கிறது. முதன் மடமாக தேவப்பெயர்த் தொகுதியும் மக்கட்பெயர்த் தொகுதியும் இப்பதிப்பில் உள்ளன. இப்பதிப்பில் சூடாமணிப் பாடல் ஒவ்வொன்றும் பத்துப் பத்து விளக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சொற் பாகுபாடு என்றோர் அமைப்பு உள்ளது. அவ்வமைப்பில் பின்வரும் விளக்கங் களைக் காணலாம். சூடாமணியின் ஒரு பாடலில் உள்ள சொற்களில் சங்க இலக்கியச் சொற்கள், பிற தமிழ்ச் சொற்கள், கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை, வடசொற்கள், மணிப்பவளச் சொற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையும் தமிழ்ச் சொற் பொலிவை அறிவிப்பனவாகும். ஒரு மொழியில் சொற்கள் பல்கியிருப்பதும் ஆழமான கருத்தைத் தருவதும் மொழியின் சிறப்பை மட்டுமல்லாமல் மொழிக்குரிய தமிழரின் சிறப்பையும் அறிவிப்பதாகும். சங்க இலக்கியங்களில் இவ்வகைச் சொற்களைக் காண இயலும். காலப்போக்கில் இம்முறை குறைந்துகொண்டே வந்தது. அவ்வப்போது தோன்றிய மொழியறிஞர் பல சொற்களைப் படைத்தனர். முன்னரே அவ்வறிஞர் குறிக்கப்பட்டுள்ளனர். அன்னோர் தமிழ்மொழி பற்றி எழுதியுள்ள நூல்கள் மொழிக்கு ஆக்கம் மட்டுமல்லாமல் தமிழ்மொழி பொலிவு பெறவும் வழிவகுப்பனவாகும். எவ்வாறு நோக்கினும் தமிழ் பயன்பாட்டிற்கு நலம் தருவதும் கருத்துக் களை வழங்குவதற்கு இடம் தருவதும் கொண்டதாகும். இவ்வாறமைந்த 133