பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி (உரிச்சொற் பனுவல் - நிகண்டு) சிறப்புப் பாயிரம் வாழ்த்தும் நூற்பெயரும் பொன்னு நன்மணியுமுத்தும்புனைந்தமுக்குடைநிழற்ற ம்ன்னுபூம்பிண்டிநீழல்வீற்றிருந்தவணைவாழ்த்தி மன்னிய நிகண்டுது டாமணியெண்வொன்றுசொல்வன் இந்நிலந்தன்னின்மிக்கோர்யாவருமினிதுகேண்மின் 1 பொன்னும் நன் மணியும் முத்தும் புனைந்தமுக் குடைநிழற்ற, மின்னுபூம் பிண்டி நீழல் வீற்றிருந் தவனை வாழ்த்தி. மன்னிய நிகண்டு சூடா மணியென ஒன்று சொல்வன்; இந் நிலம் தன்னின் மிக்கோர் யாவரும் இனிது’ கேண்மின்! பொருள்: பொன்னும் நன்மணியும் முத்தும - பொன்னாலும் குற்றமில்லாத மாணிக்கத்தாலும் முத்தாலும் புனைந்த - முறையே செய்தும் பதித்தும் கோத்தும் அழகாக ஒப்பனை செய்யப்பெற்ற பாட வேறுபாடு: 1. சூளாமணி என - 'சூடாமணி” வழங்கு பெயர் என்பது ஆய்வுரையில் நிறுவப் பெற்றுள்ளது. - 2. இருந்து கேண்மின் - இருந்துதான் கேட்பர் மனம் உவந்து இனிது’ கேட்கு மாறு வேண்டுதல் பொருந்தும். இதனை அடியொற்றிய அரும்பொருள் நிகண்டும் (செய். 2) செவிமடுத்து இனிது கேண்மின்' என்பதாலும் இனிது பாடம் பொருந்தும். 'இசைந்து கேண்மின் - இப்பாடத்திற்கும் மேற்காட்டியது பொருந்தும்.