பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி சிறப்புப் செய்யுள்-2 - முக்குடை நிழற்ற - மூன்று குடைகள் நிழல்தர மின்னு பூம் பிண்டி நீழல் - ஒளிவிளங்கும் மலர்களைக்கொண்ட அதே மரத்தின் நிழலில் - வீற்றிருந்தவனை - பெருமிதத்துடன் அமர்ந்துள்ள அருகக் கடவுளை வாழ்த்தி - யான் போற்றி நிகண்டு மன்னிய - சொல் தொகுதிகள் பொருந்திய சூடாமணி என - சூடாமணி என்னும் பெயரில் ஒன்று சொல்வன் - ஒரு நூலைச் சொல்வேன். இந்நிலம் தன்னில் - இவ்வுலகத்தில் தமிழ் வழங்கும் இடமெல்லாம் மிக்கோர் யாவரும் - நூலறிவில் மேம்பட விரும்புவோர் அனைவரும இனிது கேண்மின் - மனம் உவந்து கேட்பீர். பொருள் விளக்கம்: நல்ல மாணிக்கம் - குணம் பன்னிரண்டு அமைந்து குற்றம் பதினாறு அற்றது: - மூன்று குடை - சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் என்பர் அருக சமயத்தார்: அசோக மரம் - அருகக்கடவுள் அமர்தற்குரிய மரம் நிகண்டு சூடாமணி- இந்நூல் ஆய்வுரையில் விளக்கம் உள இ! மிக்கோர் - நூலறிவில் மிகுதற்கு இந்நூல் அடித்தள நூலாதலின் நூலறி வில் மேம்பட விகும்புவோர் என எதிர்காலம் பெற்றது யான் என்னும் நோக்கி உரைக்கப் தோன்றா எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது. ஒன்று சொல்வேன் என்றால் ஒன்று, தனிச்சிறப்புடைய நூல்' என்று ஆசிரியரின் தன்னம்பிக்கையை உணர்த்துகின்றது. (1) மூன்று வகை முன் நூல்கள் பூமலியசோகினிழற்பொலிந் தவெம்மடிகண் முன் ஏமமாமுதநூல்சொல்லக்கணதாரிய றாமொருவழிநூல் - - ன்ாள்