பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி செய்யுள்-3 செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர் - சிவந்த கதிர்களையுடைய இளஞாயிற்றின் மேன்மைப் பெயரினால் தோன்றிய திவாகரரும் பிங்கலர் - பிங்கலரும் உரை நூற்பாவில் -இலக்கணம் உரைத்தற்குரிய நூற்பாவினால் பேணினர் செய்தார் - விரும்பி திவாகரம், பிங்கலம். என்னும் நூல்களை முறையே செய்தனர். இங்கு இவை இரண்டும் - இத்தமிழகத்தில் திவாகரம், பிங்கலம் என்னும் இவ்விரண்டு நூல்களும சேர - இணைத்துப் பார்த்து கற்க எளிது அல - கற்பதற்கு எளிமை அல்லாதவை என்று சூழ்ந்து - என்று ஆழ்ந்து எண்ணி பொருள் விளக்கம்: அங்கு - அருகர் வடமொழியில் மூலநூல் செய்ததாகக் குறிப்பதாலும், அடுத்துத் தமிழகத்தைக் குறிக்க புலமாகப் பொருள்கொள்ளப்பெற்றது. $ இங்கு' என்று வருவதாலும் வட திவாகரர்-ஒரு சமணச் சான்றோர். தமிழில் கிடைத்துள்ள நூல்களில் முதல் உரிச்சொற் பனுவல் (நிகண்டு) செய்தவர். தம் பசி களைந்து பேணிய சேந்தன் என்னும் மன்னனுக்கு நன்றி படைக்கும் நோக்கில் அவன் பெயரையும் தன் பெயரையும் இனைத்துத் தாம் செய்த நூலுக்குச் சேந்தன் திவாகரம் என்று பெயரிட்டார். செங்கதிர் வரத்தில் தோன்றும் - தினம்-பகல்; கரன்-கதிர்களாகிய கைகளையுடையவன் எனும் வடசொல் கதிரவனைக் குறிக்கும். இக் கதிரவன் பெயரிடப்பெற்றதால் 'செங்கதிர் வரத்தில் தோன்றும் எனப் பட்டது. இவர் மாணவராகிய பிங்கலரும் இவரைச் செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர்’ என்று இத்தொடரால் போற்றியமை குறிக்கத் தக்கது. - பிங்கலர் - சேந்தன் திவாகரத்தை அடுத்துத் தமிழில் உரிச்சொற் பனுவல் செய்த சமணச் சான்றோர். பிங்கலம் - பொன்மை (சூடா 553) பொன் நிறத்து ஒளிதரும் கதிரவனைக் குறிக்கும் சொல். திவாகரர் மாணவராகிய இவரும் கதிரவன் பெயர் பெற்றவர். . 'நூற்பர் - இதற்கு வடசொல்லாம் சூத்திரம் என்பதைக் கையாண்டார். நூல் - இலக்கணம்; பா -அதற்குரிய பாடல். ... : : - -