பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3,4...” மணி செய்யுள்-7 முன்னதனின்றும் இது வேறுபட்ட தாகையால் இவ்விரண்டையும் பிரித்துக் காட்ட "ஒடு" கொடுத்தாா. ஒருசொற் பல்பொருட் பெயர்த் தொகுதிதான். தமிழ் பயில்வார்க்குச் சொற் பொருள் காண மிகுதியும் பயன்படும் சிறப் புடையது. எனவே உம்மை கொடுத்தா. (உம்மை-எச்சவும்மை) உரைத்த பல்பெயர்க் கூட்டம்-இவ்வாசிரியர் திவாகரர், பிங்கலர் என் லும் இருவரது நூல்களையும் நெறியாகக்கொண்டு இந்நூலை அமைக் கின்றார். 12ஆவது தொகுதியாகிய பல்பெயர்க்கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி பிங்கலத்தையில் இல்லை. பிங்கலர் உரைக்காதது. சேந்தன் திவாகரத்தில் உள்ளது, திவாகரர் உரைத்தது. எனவே 'திவாகரரால் சொல்லப்பெற்ற' என்று பொருள் கொள்ளப்பெற்றது, இதனைத் தொடுத்துமொழிவார் போல இந்நூலாசிரியர் 12ஆவது தொகுதியின் கடைக்காப்புப் பாடலும் நூலின் இறுதிப் பாடலுமான பாடலை 'உரைத்த பல்பேர்க் கூட்டத் தொருபெயாத் தொகுதி தன்னில் என்று 'உரைத்த' என்னும் சொல்லை வைத்தாா. - தான் - அசை வருமுறை - இத்தொடரை வருமுறை உரைத்தான் வீரைமன்னன் மண்டலவன்தானே' என்று விலங்கின் பொத்தொகுதிக் கடைக் காப்பிலும் 'மரப்பெயர்த் தொகுதி தன்னை வருமுறை கூறலுற்றாம்' என்று மரப் பெயர்த் தொகுதித் தொடக்கப் பாவிலும் வைத்தார். இவ்விரு தொகுதிக ளிலும் மேலும் பலவற்றிலும் தொடக்கச் சொற்களாகவும், முடிவுச் சொற்க ளாகவும் வரும் முறை திவாகரத்துடன் ஒத்தும் பிங்கலந்தையுடன் ஒவ்வா மலும் இருத்தல் குறிக்கத்தக்கவை. திவாகரத்தை அடிபொற்றி இவ் வாசிரியர் செல்கின்றமை புலனாகின்றது. எனவே, திவாகரம் வரும் முறை எனப்பெற்றது. . விலங்கொடு - 'விலங்கு இன் ஒடு' என்று 'இன்' சாரியை ஓசை இனிமை கருதி மட்டும் அன்று; நூலாசிரியர் விலங்கின் பேர்த் தொகுதி என்றும், 'விரவிய விலங்கின் ஈட்டம்' என்றும் அத்தொகுதியின் தொடக்கத் தும் கடை க்காப்பிலும் குறித்தமை கொண்டுமாகும். அத்தொகுதியும் 'இன்' சாரிபை கொண்ட பெயர் பெற்றது. . . " - பண்பு, செயல், ஒலி-பற்றிய - 'பண்பு பற்றிய பெயரின் ஈட்டம்' என்றும் 'செயல் பற்றும் பெயர்க் கூட்டத்தை என்றும் செயல் பற்றும்பேர்' என்றும்,