பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் சூடாமணி செய்யுள்-8 'ஒலி பற்றும் பெயர்க் கூட்டத்தை என்றும், 'ஒலி பற்றும் பேர்ச்சொல்லும் என்றும் பற்றுச்சொல் இணைத்தமை கொண்டு அவ்வத் தொகுதிகள் 'பற்றிய’ என்னும் சொற்பெய்து அமைக்கப்பெற்றன. பெயர், பேர் - இரு சொற்களையும் ஆசிரியர் ஆங்காங்கு கையாண் டுள்ளார். பெயர் 13 இடத்தும், பேர் 8 இடத்தும் வந்துள்ளன. பெரும் ஆட்சி கொண்டும், ஒலி நயங்கொண்டும் பெயர் என்னும் சொல்லொடு 'தொகுதிப்பெயர்’ என்று அமைக்கப்பெற்றது. (7) பனுவற்பாடலும் அவையடக்கமும் தன் பெயரும் ஒருங்குளபொருளுமோர்ந் திட்டுரைத்தனன்விருத்தந்தன்னில் இருந்தவைநல்லோர்குற்றமியம்பிடாரென்பதெண்ணித் திருந்தியகமலஹர் திதிருப்புகழ்புராணம்செய்தோன் பரந்தசீர்க்குணபத்திரன்றாள்பணிந்தமண்டலவன்றானே 8 ஒருங்குள பொருளும் ஒர்ந்நிட் டுரைத்தனன் விருத்தம் தன்னில், 'இருந்தவை நல்லோர் குற்றம் இயம்பிடார் என்ப தெண்ணித் திருந்திய கமல ஊர்தி' 'திருப்புகழ் புராணம் செய்தோன் பரந்தசீர்க் குணபத் திரன்தாள் பணிந்தமண் டலவன் தானே பாட வேறுபாடு: 1 கமலமூர்த்தி பிங்கலத்தில் (192) அருகன் ஊர்தியாக அம்புயம் (கமலம்) சொல்லப்படுகிறது. சேந்தன் திவாகரம் (11) அபிதானமணிமாலை (4) முதலிய பல உரிப் பனுவல்களில் அருகப் பெயர்களில் 'கமலஊர்தி உள்ளது. கமலமூர்த்தி' இல்லை. பின் எழுந்த அகர முதலிகள் பலவும் 'கமல ஊர்தி' என்பதையே குறிக்கின்றன. இந்நூல் செய்யுள் 354இல் 'மடம் அவிழ் கமல ஊர்தி வந்த வாமனை' என்றுள்ளது. இதில் "வந்த' என்பது கமலத்தை ஊர்தியாகக கொண்டுவந்த என்னும் பொருளைத்தருவதும் " கமல ஆர்தி ' என்னும் பாடத்தை உறுதிசெய்கின்றது. 13