பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-11 11 முத்தன்,மா முனிவன், கருத்தன் முக்குடைச் செல்வன், முன்னோன், சித்தன்,எண் சிறப்பும் உள்ளோன், திகம்பரன், கொல்லா வேதன், நித்தன், நின் மலன்,தின் நாமன், நிராயுதன், நேமி நாதன், அத்தன்,அ னந்தன், சோதி, அரியணைச் செல்வன், ஆதி ... ... பெ. பொ. விளக்க்ம் முத்தன்-காமம் முதலிய விட்டவன் கருத்தன்-உலகு படைத்தவன் முக்குடை-சந்திராதித்தியம், நித்தியவிநோதம், சகலபாசனம் என்பர்! சித்தன்-செயல் முடிக்கும் வல்லவன்; எண்சிறப்பு, சுடர்மண்டலம், சுர துந்துபி, தெய்வத்துவனி, சிங்கப்பிடர் அணை, பிண்டி, வெண்சாமரை மலர்மாரி, பொற்குடை என வானவர் அருகனுக்குச் செய்யும் எட்டு வகைச் சிறப்புகள்’ . திகம்பரன்-திக்குகளையே ஆடையாகக் கொண்டவன். @arvar வேதன்-கொல்லாமையை மறையாக்கியவன் நித்தன்-பிறப்பு இறப்பு இல்லா நிலைத்தவன் நின்னாமன்-பெயரற்றவன் . நிராயுதன்-படைகளற்றவன் நேமி-ஆழி அத்தன்-ஆளுமையுள்ளவன் ஆதி-முலவன் பாட வேறுபாடு: