பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகின்றது, “உரி என்பதே உரிச்சொல்லைக் குறிக்கப் போதுமானது. எனவே 'உரிப்பனுவல்' என்று இங்கு ஆளப்பெறும். இந்நூலின் பெயர் ஆராய்விற்கு உரியதாகியுள்ளது. இவ்வாராய்வில் இந்நூற்பெயர் முடிவு கொள்ளப்பெறும்வரை 'இந்நூல் என்று இங்கு கையாளப் பெறும். 'இந்நூல் ஆசிரியர் 'மண்டல புருடர்' எனப்பெற்றார். பெயர்பற்றிய சிற்றாய்வும் உண்டு. எனவே 'மண்டலவர் என்னும் பெயர் குறிக்கப்பெறும். சிதறல்களை ஓரிடத்தில் சேர்த்துத் தொகுப்பது தொகுதி. பொது வில் தொகுதி என்னும் சொல் எப்பொருளின் தொகுப்பையும் குறிக்குமாயினும் இங்கு இந்நூல் பகுக்கப்பெற்றுள்ள பிரிவுகள் தொகுதி' என்று பெயர் கொடுக்கப்பெற்றுள்ளமையால் இங்கு தொகுதி என்பது இந்நூலின் பகுதியைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பெறும் செய்யுளும் எண்ணும் இந்நூல் விருத்தத்தையும் விருத்தங்களின் தொடர் எண்களையும் குறிக்கும். செய்யுளின் ஆசிரியரால் எழுதப்பெற்ற சொல்லும் தொடரும் செய்யுளும் 'மூல பாடம் எனப்பெறும். இங்கு பாடம் என்னும் ஆட்சியே அதனைக் குறிப்பதாகும். இச்சொல்லாட்சிகளில் மனம் பற்ற அன்பர்களை வேண்டி ஆராய்வு பிறக்கிறது. 10 ஆறுமுக நாவலர்-சூடாமணிப் பதிப்பு முகப்பு-ஆசிரியர் பெயர் 11 மண்டலவர்-சூடா-102-4