பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-19 திருமால் மாதவன்மாயன்செய்யவாமனன்வாசுதேவன் சீதரனந்தகோபன்றிருமகனுவனமேற்ற கேதனன்பதுமநாபன்கேசவன் பஞ்சவர்க்குத் தூதனேசாரங்கபாணிசுரிமுகச்சங்கமேந்தி 19 மாதவன், மாயன், செய்ய வாமனன், வாசு தேவன், சீதரன், நந்த கோபன், திருமகன், உவனம் ஏற்ற கேதனன், பதும நாபன், கேசவன், பஞ்ச வர்க்குத் துTதனே சாரங்க பாணி, கரிமுகச் சங்க மேந்தி ... ... பெயர்ப் பொருள் விளக்கம்: மாதவன்-மது என்பவன் மரபினன் வாமனன்--குள்ள வடிவினன் வாசுதேவன்-வாசுதேவன் மகன் சீதரன்-திருமகளை மார்பில் (தரித்தவன்) கொண்டவன் உவணம் கேதனன்-கழுகுக் (கருட) கொடியினன் பதுமநாபன்-கொப்பூழில் தாமரை மலர் கொண்டவன் கேசவன்-அழகிய மயிருடையவன் - சாரங்கபாணி-சாரங்கம் என்னும் வில்லைக் கையில் கொண்டவன் சங்கம் ஏந்தி-சங்கைக் கையில் ஏந்தியவன் . - செய்ய (அடைமொழி)-தேர்ந்த சுரிமுகம் (அடைமொழி)-வலமாகச் சுரிந்த முகத்தையுடைய திருமால் தொடர்ச்சி கொண்டல்வண்ணன்கோவிந்தனச்சுதன்மால் விண்டுவேலையிற்றுயின்றோன்விரகினால் துயின்றோன்விரகினாலுந்திபூத்தோன்