பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெர்; 21 வலவன், தேவகி மைந்தன், வனமாலி, படியி டந்தோன், சலசலோ சனன்,அ னந்த சயனன்,பீ தாம்ப ரன்பேர் உலகளந் தருள்வோன் பஞ்சா யுதன், உல குண்ட பெம்மான், அலகைதன் முலையோ டாவி அருந்தினோன், நார சிங்கன் ... ... பெயர்ப் பொருள் விளக்கம்: வலவன்-தேர் ஒட்டி வனம் மாலி-துழசி மாலையணிந்தவன் படி இடந்தோன்-நிலத்தைக் கிழித்தவன் சலசம் லோசனன்-தாமரை மலர்போன்ற கண்ணையுடையவன் அனந்தன் சயனன்-ஆதிசேடன் என்னும் பாம்பின்மேல் படுத் திருப்பவன் பிதம் அம்பரன்-பொன் ஆடை உடுத்தவன் பஞ்ச ஆயுதன்-வில், வாள், சங்கு, ஆழி, தண்டு என்னும் ஐந்து படைக் கருவிகளை உடையவன் அலகை-பேய் போன்ற பூதனை நரம் சிங்கம்-மாந்த உருவமும் அரிமா உருவமும் கூடிய உடல்ை உடையவன் பேர்-இடைவிளக்காக நின்றது. திருமால் நிறைவு அரவனைச்செல்வன்கண்ணனறிதுயிலமர்ந்தமூர்த்தி பிரமனைப்பெற்றதாதையின்னைகேள்வன்முகுந்தன் கரியவனெடியோன்காவற்கடவுணாரணனேழேழே அரியின்பேராகுமற்றுமபிதானமனந்தமாமே